விடாமுயற்சி:
இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அந்த படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மகிழ் திருமேணி அஜித்தை இயக்கவிருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.
படத்தை தொடர்ந்த சர்ச்சைகள்:
ஆனால் படப்பிடிப்பின் போது ஏகப்பட்ட வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் வெளிவந்தன, அதாவது அஜித் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை எனவும், இதனால் தான் படப்பிடிப்பு முடிய தாமதமானதாகவும் கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனி சில காட்சிகளை மீண்டும் ரீ-ஷுட் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் படப்பிடிப்பு முடிந்து வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று படமானது வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: நம்ம படம் ரிலீஸ் ஆகுற நாள்தான் பண்டிகை...மகிழ் திருமேனிக்கு அஜித் கொடுத்த மோட்டிவேஷன்
கார் ரேஸ் குறித்து மகிழ் திருமேனி:
இந்நிலையில் அஜித்தின் கார் ரேஸ் குறித்து பேட்டி ஒன்றில் மகிழ் திருமேனி பேசியதாவது, ”அஜித் சார் ரேஸ்சுக்கு கிளம்புறதுக்கு 10 நாளுக்கு முன்னாடி நாங்க ஷூட்டிங் முடிக்கிற நிலையில இருந்தோம், அப்போ அஜித் சார் பயிற்சியை முடிச்சிட்டு வந்து இருந்தாரு, அப்போ எங்களுக்கு ஒரு வீடியோ காட்டுனாரு, அதுல இரண்டு முறை அவருக்கு விபத்து ஏற்ப்பட்டது இதை பார்த்து நாங்க ஆடிபோய்டோம்.
100 சதவீதிம் அர்ப்பணிப்பு:
அப்போ சார் சொன்ன வார்த்தை எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு என்றுமே மறக்க முடியாது. மகிழ் நான் இப்போ ரேசில் கலந்துக்கொள்ள போகிறேன், அப்போ எனக்கு என்ன வேண்டுமானலும் நடக்கலாம். அதனால் தான் என்னுடைய படங்களை முடித்துக்கொடுக்கிறேன். என்னையை நம்பி பணம் போட்டு படம் எடுக்குறாங்க, இத்தனை தொழிலாளர்கள் என்னை நம்பி இருக்காங்க, நான் கார் ஆக்சிலர்ரேட்டரை மிதிக்கும் போது 100 சதவீதம் மிதிக்க வேண்டும். 90% மிதிச்ச நான் ஓட்டுற ரேஸுக்கு நியாயம் பண்ணதாக இருக்காது என்று அஜித் தன்னிடம் சொன்னதாக மகிழ் திருமேனி கூறினார்.
மேலும் அஜித் சார் எதில் இறங்கினாலும் 100 சதவீகிதம் முழு மூச்சோடு இறங்குவார், ரேசிங்காக இருந்தாலும் சரி, படப்பிடிப்பு என்றாலும் சரி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை அஜித் சார் கொடுப்பார்” என்றார் மகிழ் திருமேனி