Thalapathy68 First Look:  விஜய் நடிக்கும் தளதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்ற அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். பெயரிடப்படாமல் தளபதி 68 என அழைக்கப்படும் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். 

 

படத்தை கல்பாத்தி அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்திற்கு சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. 





தற்போது தளபதி 68 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது, இலங்கையில் படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.