தளபதி விஜய் ரசிகர்களுக்கு அவர் குறித்த ஒவ்வொரு அப்டேட்டுமே திருவிழாதான். அவ்வகையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ள விஷயம் தளபதி 68 படத்தின் இசை வெளியீடு பற்றியதுது தான். லோகேஷ் கனகராஜின் லியோ படத்திற்குப் பிறகு இந்த படம்  நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அப்படத்தின் ஆடியோ உரிமம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.  தளபதி 68 படத்தை மாநாடு, மங்காத்தா, சென்னை 28, சரோஜா, கோவா போன்ற சுவாரசியமான படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்குகிறார். 


தளபதி 68 படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் அதிகப்படியான விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்தப் படத்துக்கும் வசூலிக்காத விலை என்று பேச்சுகள்தான் கோலிவுட் வட்டாரத்தை ஆக்கிரமித்துள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய்தான்.  அவரது படங்களில் மோசமான விமர்சனங்களைக் கொண்டவை கூட, பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பான வசூலைக் குவித்துதான் வருகிறது.


தளபதி 68 படத்திற்கு தமிழ் சினிமாவின் பிஜிஎம் கிங் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இசை அமைப்பாளர் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாலே யுவன் சங்கர் ராஜா வேற லெவலில் ஹிட் சாங்ஸ் கொடுப்பார் என்பதால், மாஸ் ஹிரோவான விஜய்க்கு எவ்வளவு பிஜிஎம்கள் கொடுக்கப்போகிறார் என்ற செய்தி தான் இப்போது கேள்வியாகவும் ஆவலாகவும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்த படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் தீவிரமாக அரசியலில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 




படம் பெயர் என்ன?


முன்னதாக தளபதி 68 படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் நடிக்க நடிகை ஜோதிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. மற்றொருபுறம் நடிகை பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.


தளபதி 68 படம் பற்றிய அறிவிப்பு கடந்த மே 21ஆம் தேதி வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில்,  இப்படத்துக்கு ‘சிஎஸ்கே’  எனப் பெயர் வைக்கப்படலாம் என்றும், கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் இருக்கக்கூடும் என்ற வதந்திகளும் வெளியாகின.


லியோ ரிலீஸ்


லியோ திரைப்படம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையைக் குறிவைத்து வரும் அக்.19ஆம் தேதி வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் பெரும் திரைப்பட்டாளத்தின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில்  ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் மிக விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில் இப்படம் வெளியாகி சில வாரங்களிலேயே நவம்பர் மாதத் தொடக்கத்தில் தளபதி 68 படப் பணிகள் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.