நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக விகாசப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
விஜய் நடிக்கும் முக்கியக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் விஜயை சந்தித்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் உள்பட ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்படும் பல புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
மும்பை கேங்ஸ்டர் Vs லோகேஷ் யுனிவர்ஸ்
இப்படத்தின் ஷூட்டிங் வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதம் நிறைவடையும் எனக் கூறப்படும் நிலையில், அடுத்ததாக விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் ’தளபதி 67’ படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
’தளபதி 67’ படத்தில் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே போல விஜய் இந்தப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதாகவும் ஃப்ளாஷ் பேக்கில் வரும் காட்சிகளில் இளம் வயது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் சமந்தா இப்படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்க உள்ளதாகவும், லோகேஷ் யுனிவர்சின் கதாபாத்திரங்கள் இப்படத்திலும் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹிட் படத்தில் அடுத்த பாகமா?
முன்னதாக லோகேஷ் கனகராஜ் தான் சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்வதாகவும், அடுத்த படம் குறித்த அப்டேட்களுடன் விரைவில் வருவதாகவும் அறிவிப்பு வெலியிட்டு தளபதி 67 படத்துக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த அப்டேட்களை எல்லாம் வைத்து ’தளபதி 67’ படம் மும்பையை தளமாகக் கொண்டு வெளியாகி ஹிட் அடித்த ’காலா ’ அல்லது ’பாட்ஷா’ படங்களில் இரண்டாம் பாகமாக உருவாகலாம் என ஆரூடம் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும் படிக்க: Watch Video : நயகரா நீர்விழ்ச்சியில் குதித்து விளையாடும் சின்னத்திரை க்யூட்டி.. வைரலாகும் சிவாங்கி வீடியோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்