விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் கேங்ஸ்டர் கதைகளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தின் 3வது வாரத்திலோ டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ ஆரம்பிக்கலாம் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஷூட்டிங் என்று ஆரம்பம் :
நடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு டிசம்பர் 7, 8 மற்றும் 9ம் தேதி நடைபெறவுள்ளது எனும் தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளார். தளபதி 67 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து காஷ்மீரில் சென்று ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. அங்கு படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
ஷூட்டிங் முன்னரே வெளியாகும் ப்ரோமோ :
தளபதி 67 படத்தின் ஷூட்டிங் என்று தொடங்கும் என்ற அப்டேட்டிற்காக மிகவும் ஆர்வமாக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, படத்தின் ப்ரோமோவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் - விஜய் காம்போவில் உருவாகும் இப்படத்தை தயாரிக்கிறார் லலித் குமார். இந்த முழு நீள ஆக்சன் படத்திற்கு தெறிக்க விடும் இசையும் நாம் அனைவரையும் தெறிக்க விட போகிறார் இசையமைப்பாளர் அனிருத்.
லோகேஷ் கனகராஜ் ஹிட் வரிசையில் சேரும் தளபதி 67 :
இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற இயக்குனரான லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து, இந்த தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.