வாரிசு ரிலீஸ் எப்போது ?


 வாரிசு படத்தின் விநியோகஸ்தரான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ், அப்படத்திற்கான கட்-அவுட்டை தயாரித்து, அதை தியேட்டர் வாசல்களில் ஒட்டும் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். அதனால் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று உறுதியானது. ஆனால் எந்த நாளில் வெளியாகும் என விளங்காமல் இருந்தது. பலரும், இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை பரவி வருகின்றனர்.





அதற்கு, ஏற்றவாரு அதே நாளில் வெளியாகும் என்ற தகவல் கிட்டதட்ட உறுதியாகி விட்டது என்றும், கூடிய விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான செய்தி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கட்டா குஸ்தி படம் எப்படி இருக்கு ?






நவம்பர் 2 ஆம் தேதி விஷ்ணு விஷாலின் பிறந்தநாளன்று   தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும்  கட்டா குஸ்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து வெளியான ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் தியேட்டர்களில் படம் ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தை காலை முதல் காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கவான ஃபேமிலி படம், என்ற பாசிடீவான கருத்துக்களை ஷேர் செய்துவருகின்றனர்.


விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் 






தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட், மாலிவுட் திரையுலகிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். ஹீரோவாக, வில்லனாக, துணை கதாபாத்திரமாக, சிறப்பு தோற்றம் என நடிப்பில் அனைத்து இடங்களையும் கைப்பற்றிய இந்த நடிகர் தற்போது மல்டி ஸ்டாரர் திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 


இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரியாக 'டிஎஸ்பி'  திரைப்படம் ,கட்டா குஸ்தி படத்திற்கு போட்டியாக இன்று வெளியாகிவுள்ளது.


மஞ்சிமா - கெளதம் கார்த்திக்கின் திருமண போட்டோஸ் 







மஞ்சிமா - கெளதம் கார்த்திக் ஜோடிக்கு கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு உதவியர்களுக்கு நன்றி தெரிவித்து, திருமணம் தொடர்பான புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.


ஹவலா லைகர் படமும் விஜய் தேவரகொண்டாவும்




ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். விசாரணை முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டா, “ அமலாக்கத்துறை அவர்களின் வேலையை செய்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்துள்ளேன். நீங்கள் என் மீது காட்டிய அன்பினால்தான் நான் சினிமா துறையில் வளர்ந்தேன். அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் போது பல பிரச்னைகள் உண்டாகும்.


அதுதான் வாழ்க்கை இது எனக்கு ஒரு அனுபவம். அவர்கள் அழைத்தார்கள் நான் வந்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். உள்ளே நடந்ததை நான் கூறினால் அவர்கள் வருத்தப்படுவார்கள்.” என்று பேட்டி கொடுத்த பின் அங்கு இருந்து புறப்பட்டார்.