8 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய  ‘தீ தளபதி’ 


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது.வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விஜய் பாடிய  ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.



மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தப்பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் வகையில் நேற்று  'தீ தளபதி' பாடல்  வெளியானது. தற்போது, இப்பாடலானது வெளியான 18 மணி நேரத்தில் 8 மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது.


தளபதி 67-க்கு ரெடியா .?






பெரிதும் எதிர்பார்த்த விஜய்யின் 67வது பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பிரசாத் லேப்பில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஷூட்டுக்காக இரண்டு செட்கள் பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுவதால் 2 செட்களில் ஒன்று முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் நாளை முதல் 3 நாட்களுக்கு ப்ரோமோ ஷூட் நடைபெற்று படம் குறித்த அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் காஷ்மீரில் நடக்கவுள்ள நிலையில் ஹீரோயினாக த்ரிஷா நடிப்பார் என முன்பே தகவல் வெளியாகியிருந்தது. சமீபத்தில் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற ஆங்கில படத்தின் உரிமையை லோகேஷ் பெற்றிருந்தார் என்பதால் அப்படம் தான் தளபதி 67 ஆக உருவாகவுள்ளதா அல்லது வேறு எதுவும் கதையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.


வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா


பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நந்தா, பிதாமகன் படங்கள் மெகா ஹிட் கொடுத்தன. மீண்டும் இருவரும் இணையும் விதமாக வணங்கான் திரைப்படம் அமைந்தது. பின்னர், இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சூர்யா இத்திரைப்படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியானது. 






ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளிட்டனர். அதையடுத்து, இப்படம் இருவரின் கூட்ணிடயில் வெளிவரும் என பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், இப்போது வணங்கான் படத்திலிருந்து, சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, பாலா மற்றும் சூர்யா ரசிகர்கள் இடையே இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.


ஹன்சிகாவின் திருமண விழா நிறைவு 







ஹன்சிகா - சோஹைல் கதுரியாவின் திருமண நிகழ்வு சூஃபி இசை கச்சேரியுடன் தொடங்கியது. பின்னர், ஹல்தி (நலங்கு) நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. டிசம்பர் 4 ஆம் தேதியான நேற்று ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இவர்களின் திருமணம் கோலகலமாக நடைபெற்றது.


காலமான சுரேஷுக்கு இறங்கல் தெரிவித்த விடுதலை குழு






சென்னை வண்டலூர் அருகே  விடுதலை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை படக்குழுவினர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சுரேஷ் உயிரிழந்து விட்டார். தற்போது, அப்படக்குழுவினர் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.