லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கும் அடுத்தப்படமும் கேங்கஸ்டர் கதைதான் என்று பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 3 ஆம் வெளியான திரைப்படம் விக்ரம். இந்தப்படம் மக்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப்படத்தின் தயாரிப்பாளருமாகவும் இருந்த கமல், லோகேஷூக்கு லெக்சஸ் கார் ஒன்றையும் பரிசளித்தார். இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் அந்தத்தகவலை பேட்டி ஒன்றின் வாயிலாக மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த பேட்டியில் ரசிகர் ஒருவர் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் கதையை எப்போது டைரக்ட் செய்வீர்கள் என்று கேட்க, அதற்கு பதிலளித்த லோகேஷ், அப்படியான ஒரு கதையைத்தான் அடுத்தப்படத்தில் செய்ய இருக்கிறேன்.” என்று பதிலளித்தார்.
முன்னதாக இந்தக்கதையைதான் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்ததகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அண்மையில் கலந்து கொண்ட தனியார் விருது நிகழ்ச்சியில், தளபதி 67 குறித்து கேள்வி எழுப்பிய போது, அந்தப்படம் மாஸ் அண்ட் க்ளாஸாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தளபதி 66 என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ராஷ்மிகா மந்தனா நடிகையாக நடித்து வரும் இந்தப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம், பிரபு, சங்கீதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.