லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.


விருமன் படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பட ப்ரொமோஷனுக்காக விருமன் படக்குழுவினர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். கேரளாவில் நடந்த விருமன் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி  Thalapathy67 படத்திற்கு பிறகு கைதி படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்று தெரிவித்தார்.


விஜயுடன் ஏற்கனவே மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜயின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் கேங்ஸ்டர் கதைகளத்தை கொண்டது என்ற தகவல் முன்னரே வந்தது. இயக்குனர் லோகேஷ், விக்ரம் படத்தில் நடித்த சிலரை விஜயின் 67-வது படத்திலும் நடிக்க தக்கவைத்துள்ளார்.






விக்ரம் படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்கு பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சோஷியல் மீடியாக்களில் இருந்து குட்டி ப்ரேக் எடுப்பதாக ட்வீட் செய்திருந்தார். இதற்கு பின் அடுத்த பட அப்டேட் உடன் திரும்ப வருவேன் என்றும் கூறியிருந்தார். அடுத்த படத்திற்கு கதை எழுதி வருவதாகவும்  அதற்கு சோஷியல் மீடியா இடையூராக இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்  லோகேஷ்.






விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் ஷூட் நவம்பர் மாதத்தின் 3 வது வாரத்திலோ டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ  ஆரம்பிக்கலாம். இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் சஞ்சாய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 2023 ஆம் ஆண்டின் ஆயுத பூஜை அன்று இப்படம் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டெம்ளேட் சினிமாவை துறந்து, கோலிவுட்டில் சினிமாட்டிக் யுனிவெர்ஸை புகுத்தியவர். விக்ரம் படத்தில் நடிகர் கார்த்தியின் கைதி படத்தை லிங்க் செய்த காட்சிகள் ரசிகர்களிடையே பெறும் ஆதரவை பெற்றிருந்தது. கைதி படத்தில் கார்த்தி ஒரு கட்டப்பையில் பல கோப்பைகளை எடுத்து செல்வது போல் ஒரு சீன் அமைந்திருக்கும். டில்லி கதாப்பாத்திரம் ஒரு கபடி விளையாட்டு வீரர் என்றும் இதன் கதை அடுத்த பாகத்தில் தொடரும் என்று முன்பு கூறியிருந்தார்.