விஜய்க்கு இதுதான் முதல் முறை... தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
முன்னதாக, 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேசிய அளவில் பிரபலமானவர் ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

‘தளபதி 66’ படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'பீஸ்ட்' பரபரப்புக்கு மத்தியில், 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய்யின் நாயகியை அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று அறிவித்தது. தற்போது, இசையமைப்பாளரை சமூக வலைதளங்களில் சிறப்பு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே, விஜய்யின் 66வது படத்திற்கு தமன் எஸ் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகள் வந்தன.
Just In




இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தங்களின் டுவிட்டர் பக்கத்தில், தளபதி 66 படத்துக்கு தமன் இசையமைக்கிறார் என்று அறிவித்துள்ளது. தமன் எப்போதுமே விஜய்யின் சிறந்த ரசிகராக இருந்து வருகிறார். மேலும் அவரது படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது தனது கனவு என்று பேட்டிகளில் வெளிப்படுத்தினார். இன்று, தமன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனது அன்பான விஜய் அண்ணாவுக்கு இசையமைப்பது இறுதியாக நனவாகிவிட்டது. இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ உடன் இணைந்து தளபதி 66 படத்துக்காக சேர்ந்திருப்பது ஒரு பெரிய உணர்வை கொடுக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேசிய அளவில் பிரபலமானவர் ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தமிழ்-தெலுங்கு இருமொழித் திட்டத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கப்பட உள்ளது.. அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்