இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை ராஷ்மிகாவை குஷிப்படுத்தும்விதமாக, விஜய் 66 படத்தில் அவர் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தற்போது ராஷ்மிகா தனது ரியாக்ஷனை காட்டியுள்ளார்.
பிரபல சினிமா நட்சத்திரம் ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்தநாள் இன்று. ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தத்தில் தன் சிறப்பான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து, ஹிட் படமான புஷ்பா படம் மூலம் இந்திய திரையுலம் முழுவதும் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் தான் தற்போது ராஷ்மிகா இணைந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 66வது படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தயாரிப்பு ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டது.
தற்போது ராஷ்மிகா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சிறந்த பிறந்தநாள் பரிசாக இதைவிட என்ன இருக்க முடியும்? என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்