Vettaiyan: ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். உலகம் முழுவதில் இருந்து ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து வந்த வண்ணம் இருக்கின்றன. அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக அறிமுகமான ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி மெல்ல தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக முள்ளும் மலரும் படத்தில் நடித்தார். ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. ஒரு காலத்தில் ரஜினிகாந்த் என்கிற பெயருக்கு இருந்த அதே உற்சாகம் தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறது என்று சொல்லலாம்.  ரஜினியின் பிறந்தநாளைக் சிறப்பாக கொண்டாடும் வகையில் தற்போது அவர் நடித்து வரும் தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியிடப் பட்டுள்ளது.


தலைவர் 170 டைட்டில்


ஜெய் பீம் படத்தை இயக்கிய த. செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்கும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங், துஷாரா, மஞ்சு வாரியர், ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். பேட்ட, தர்பார், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அனிருத் நான்காவது முறையாக ரஜினிக்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மூழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் படத்திற்கு  ”வேட்டையன்” என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. 



ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்ட டைட்டில் டீசரில் ரஜினி போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. கையில் லத்தியுடன் வரும் ரஜினி, டைலாக கூலிங் கிளாஸை கையில் வைத்திருக்கும் ரஜினி, “ குறி வச்சா இரை விழணும்” என பேசுகிறார். இதன் மூலம் ஜெயிலர் படத்தை போன்று வேட்டையன் படத்தில் மாஸ் ஆக்‌ஷன் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.