தலைவர் 171 டைட்டில் ( Thalaivar 171 Title)
ஜெயிலர் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினி.
ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடிய கையோடு ரஜியின் தலைவர் 171 படத்தை தயாரிக்க இருப்பதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது. லியோ படத்தைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக இப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ் . வரும் ஜூன் மாத இறுதிக்குள் படப்பிடிப்புத் தொடஙக் இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
கூலி டைட்டில் டீசர்
வழக்க்மாக லோகேஷ் கனகராஜ் படத்தில் போதைப் பொருட்களை மையமாக வைத்து தான் கதை அமைந்திருக்கும். இந்த முறை சற்று வித்தியாசமாக தங்க நகை கடத்தலை மையமாக வைத்து கூலி படத்தின் கதையை அமைத்திருக்கிறார். அதிரடியாக பைக்கில் என்ட்ரி கொடுக்கும் ரஜினிகாந்த் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் சம்போ சிவ சம்போ பாடல் வரிகளை பயன்படுத்துகிறார்
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அடப்பாவி என்பார்கள்.. தப்பாக நினைக்காதே.
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.
சோறுண்டு, சுகமுண்டு, மது உண்டு, மாது உண்டு மனமுண்டு என்றாலே,
சொர்கத்தில் இடமுண்டு. போடா!
இந்த வரிகளின் மூலம் ரஜினியின் கதாபாத்திரம் இப்படத்தில் என்ன மாதிரியானதாக இருக்கும் என்று யூகிக்க முடியும். முன்னதாக ரஜினியின் கதாபாத்திரம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியபோது ரஜினியின் கேரக்டர் நல்லவர் கெட்டவர் என்கிற வகையில் இல்லாமால் நடுவில் இருக்கும் என்று கூறியிருந்தார். வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க விரும்பும் ஒரு மனிதன் சரி தப்பு என்கிற வித்தியாசம் இல்லாமல் வாழ்வது ரஜினியின் கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த டீசர் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் இருப்பதால் பீரியட் கதையாக இப்படம் இருக்கலாம். அனிருத்தின் பின்னணி இசை ரஜினியின் பழைய டிஸ்கோ பாடல்களை நினைவு படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி ஏன் ராமராஜனின் சென்பகமே பாடலை விசிலடிக்கிறார் ? அதில் என்ன ட்விஸ் மறைத்து வைத்திருக்கிறார் லோக்கி