Thalaivar 170: ரஜினிக்கு தோள் கொடுக்கும் அமிதாப்! வைரலாகும் 'தலைவர் 170' கெட்டப் - அடுத்தடுத்து அப்டேட் தரும் லைகா
Thalaivar 170: தலைவர் 170 படத்தில் இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த் - அமிதாப்பச்சனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருவபர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படம் முடிந்ததும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன்:
தலைவர் 170 படத்தை இயக்கிய வரும் ஞானவேல் ஏற்கனவே ஜெய்பீம் என்ற படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இவர் ரஜினிகாந்தை இயக்கப்போவதாக தகவல் வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படமும் ஜெய்பீம் போல சமூகம் சார்ந்த படமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
Just In




இந்த படத்தில் ரஜினிகாந்துடன் 33 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கிறார். இந்த படம் மூலமாக அமிதாப்பச்சன் முதன் முறையாக தமிழ் படத்தில் நேரடியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பில் இருந்து மற்றொரு போட்டோ வெளியாகியுள்ளது.
வைரலாகும் புது புகைப்படம்:
இந்த புகைப்படத்தில் அமிதாப்பச்சன் ஒரு நாற்காலியில் அமர்ந்து தொலைபேசியை பார்ப்பது போலவும், ரஜினிகாந்த் அவரது நாற்காலி மீது சாய்ந்து அவரது தொலைபேசியை பார்ப்பது போலவும் உள்ளது. மேலும், அமிதாப்பச்சன் கையில் அடிபட்டது போல இருப்பதால் இது படத்தில் இடம்பெறும் காட்சியா? என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா ஆகிய இடத்தில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் கெட்டப் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் சமூக ஆர்வமுள்ள இயக்குனருடன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் தலைவர் 170 படத்தின் வெளியீட்டிற்காக மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
நட்சத்திர பட்டாளங்கள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் ஆகியோருடன் இந்த படத்தில் பஹத் பாசில், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, விஜய் டிவி ரக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் படிக்க: Actor Karthi: நடிகனின் உதவி அல்ல.. சமூகத்துக்கு செய்யும் நன்றிக்கடன்.. ரூ.1 கோடிக்கு உதவித்தொகை வழங்கும் கார்த்தி!
மேலும் படிக்க: Ponni Serial: ”ஒரு நியாயம் வேண்டாமாடா” .. கண்ணைக் கட்டி கணவனுக்கு உதவி.. கிண்டலுக்குள்ளான ‘பொன்னி’ சீரியல்..!