வருடா வருடம் நடிகர் அஜித் குமாரின்  ரசிகர்கள் விடாது உச்சரிக்கும்  ஒரு வார்த்தை என்றால் அது ’அப்டேட்’ என்கிற வார்த்தைதான் .எந்த சமூக நிகழ்வாக ஆகட்டும்,திரைப்பட நிகழ்வாகட்டும்,ஏன் அரசியல் நிகழ்வாக இருந்தால் கூட அங்கு நிச்சயம் அஜித் ரசிகர்கள் தல படம் குறித்தான அப்டேட் கேட்க தவற மாட்டார்கள்.


இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான துனிவு திரைப்படத்திற்கு பின்பு நடிகர் அஜித் குமாரின் அடுத்த படம் குறித்தான தகவலுக்காக அவரது ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்தனர்.அந்த சூழலில்  தான் அஜித் குமாரின் 62-வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் துள்ளி குதித்தார்கள் ஆனால் இந்த தகவல் வெளியான சில நாட்களிலேயே அந்த படம் கைவிடப் பட்டது என்கிற தகவல் அவர்களின் ஆசையில் இடியென விழுந்தது.






துனிவு படம் வெளியான அதே சமயத்தில்தான் நடிகர் விஜயின் வாரிசு படமும் வெளியானது.வாரிசு படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.ஒவ்வொரு நடிகரின் ரசிகக்கூட்டமும் தங்களது ஆதர்ச நாயகளின் படங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் மட்டும் வானம் பார்க்கும் விவசாயிகள் போல் அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் சோகம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.


தனது ரசிகர்களை எப்போதும் கைவிடாத ஏகே..


 இப்படியான இக்கட்டான சூழல்களில் எல்லாம் தனது ரசிகர்களுக்கு ஏதோ வகையில் நடிகர் அஜித் குமார் திடீர் ட்ரீட்களை வழங்குவார்.படம் குறித்தான அப்டேட் வருகிறதோ இல்லையோ அஜித் குமாரின் பைக் ரைடுகளின் அப்டேட் அவரது ரசிகர்களுக்கு உலகத்தின் எந்த மூலையிலிருந்தாவது வந்து சேர்ந்து விடும். 


பெரிதாக எந்த  ஒரு சினிமா அல்லது சமூக நிகழ்விலும் பங்குபெறாத அஜித் குமாரை பொது இடங்களில் பார்ப்பது என்பது மிக அபூர்வமான ஒரு நிகழ்வு.பயனத்தின்போது விமான நிலையத்த்தில், தேர்தலின்போது வாக்குபதிவு மையத்தில் என எண்ணி பார்த்துவிட முடியும். அப்படியான குறுகிய சந்தர்ப்பங்களில்  அவர் தனது ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுதான் செல்வார். இது இல்லாமல் அஜித் குமார் பைக் ரைட் செல்லும் ஃபோட்டோ அல்லது வீடியோ ஏதாவது ஒன்று அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளிவரும். அன்றைய தினம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.


உணவு விடுதியில் உற்சாகமாக சமைத்த அஜித்குமார்


 நடிகர் அஜித் நன்றாக சமைக்கக்கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தனது படக்குழுவினருக்கு பிரியானி செய்துகொடுத்து அசத்துவது அஜித் அவர்கள் விரும்பி செய்யக்கூடிய ஒரு செயல். தற்சமயம் அஜித் தனது பைக்கர்ஸ் டீமுடன் நேபால் சென்றுள்ளார். ப்அங்கு இருக்கும் உணவு விடுதி ஒன்றில் அஜித் முழுதாக ஒரு ஷெஃப்பாகவே உடையணிந்து உற்சாகமாக சமைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.இந்த சின்ன வீடியோவை அவரது ரசிகர்கள் அவர் படத்தின் அப்டேட் வெளியானபோது  இருக்கும் அதே உற்சாகத்திற்கு இணையாக ரசித்து மகிழ்கிறார்கள்.


தடையற தாக்க படத்தை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி  வெளியான நிலையில் இந்த வீடியோ அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக வந்துசேர்ந்துள்ளது.