தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ஜெயசுதா பாஜகவில் இணைந்த சம்பவம் ரசிகர்களிடையே விவாத பொருளாக மாறியுள்ளது. 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள் ஜெயசுதா கிட்டதட்ட 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். நடப்பாண்டில் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.


இவர் 2009  ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . பின்னர் ஜெயசுதா 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார் .  இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.






இப்படியான நிலையில் ஜெயசுதா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும், தெலங்கானா மாநிலத் தலைவருமான ஜி கிஷன் ரெட்டி முன்னிலையில் அவர் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த ஓராண்டாக அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.