மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருந்த நிலையில் தற்போது அஜித் குமார் பைக் சுற்றுப் பயணம் சென்றுள்ளது படத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.


விடாமுயற்சி


மீகாமன், தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை  இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க உள்ள படம் விடாமுயற்சி. துணிவு படத்தைத் தொடர்ந்து  நடிகர் அஜித் குமார் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்க இருந்தது. இந்நிலையில், தற்போது இந்தப்  படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில காலம் தாமதாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு காரணம் நடிகர் அஜித் குமார் என்றும் சொல்லப்படுகிறது.


உலகம் சுற்றும் சிட்டிசன்






பைக்கில் உலகத்தை ஒரு சுற்று சுற்றி வருவதே அஜித்தின் கனவாக இருந்து வருகிறது. முதலில் அஜித் குமார் பைக்கில் உலகம் முழுவதும் பயணம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வந்தது.  இந்தத் திட்டத்தின்படி கடந்த ஆண்டு இந்தியா முழுவதுக்குமான அவரது முதல் கட்டப் பயணம் முடிவடைந்ததாக தகவல் வெளியானது. இதற்கு அடுத்ததாக துணிவு படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகளுக்கு முன்பாக தனது இரண்டாம் கட்ட பயணத்தைத் தொடங்கினார் நடிகர் அஜித். இந்த முறை அவர் லே, லடாக், சத்தீஸ்கர், ஹரித்வார் ஆகிய இடங்கள் வழியாக பயணம் செய்தார். மேலும் தனது அடுத்தக் கட்ட பயணத்தை தொடர்வதற்கு முன்பு விடாமுயற்சி படப்பிடிப்பை முடிக்க இருந்தார் அஜித்.


விடாமுயற்சி தொடங்குமா






ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் தற்போது  நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது அஜித் ரசிகர்களுக்கு பல்வேறு குழப்பங்களை எழுப்பியுள்ளது. விடாமுயற்சி படத்தின் பெயரைத் தவிர்த்து எந்த விதமான அப்டேட்டும் வெளிவராத நிலையில் தற்போது படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற கேள்வியையும் சேர்த்து எழுப்பியுள்ளது.