விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே போலி மருத்துவரை மருத்துவ அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின்பு குற்றவாளியை தப்பிக்க வைத்து மீண்டும் தலைமறைவாகி இருந்த போலி மருத்துவரை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகேயுள்ள கோதண்டபாணிபுரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பால்ராஜ் என்பவர் பொறியியல் மற்றும் எம் எஸ் படிப்பு முடித்துவிட்டு மொத்த கொள்முதல் மருந்து கடையில் இருந்து மொத்தமாக ஆங்கில மருந்துகளை வாங்கி தனது வீட்டிலையே அறை ஒதுக்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மருத்துவம் படிக்காமல் மருத்துவராக பால்ராஜ் கிளினிக் நடத்தி வருவதாக விழுப்புரம் அரசு மருத்துவமனை முதன்மை குழந்தை மருத்துவர் லதா என்பவருக்கு புகார்கள் வந்ததை அடுத்து ஒன்றாம் தேதி இரவு லதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பால்ராஜ் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் ஒரு அறையில் அதிகப்படியான மருந்து மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கடந்த 31ஆம் தேதி இரவு போலி மருத்துவர் பால்ராஜை மருத்துவ குழுவினர் அன்று இரவே அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்து ஒப்படைத்து சென்றுள்ளனர். போலீசார் இரவு நேரமாகிவிட்டதால் குற்றவாளியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு மறு நாள் காலையில் பால்ராஜ் குடும்பத்துடன் தலைமறைவாகியதால் நேற்றைய தினம் தலைமறைவாக இருந்த போலி மருத்துவரை கைது செய்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்