ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சண்டகோழி சீரியல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பல புதுவித சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளது. ஏற்கனவே பல சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிய சீரியல்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அடுத்ததாக “சண்டக்கோழி” என்ற சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. 


இந்த சீரியலில் நாயகியாக ரியா விஸ்வநாதன் நடிக்க அவருக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புகழ் நியாஸ் நடிக்கிறார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்த சீரியலின் கதை 


பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஆக்ரோஷமான பையனான விக்ரமும் ( நியாஸ் ),  நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாலியான பொண்னான மகாலட்சுமியும் ( ரியா ) ஒரு மோதலில் சந்தித்து கொள்கின்றனர். மோதலில் தொடங்குகிறது. அதன்பிறகு இந்த மோதல் காதலாக மாறுகிறதா? இல்லையா? இவர்கள் திருமண பந்தத்தில் எப்படி இணைகிறார்கள்? அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பதை மையமாக கொண்டு சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்தது. 


களமிறங்கிய பிரபலங்கள் 


ரியா விஸ்வநாத், நியாஸ்,  கிருபா, சேதுபதி ,  செம்பருத்தி சீரியல் புகழ் கதிர்,ஸ்வேதா, ராஜா, தமிழ்செல்வி , சிவகுமார்,ஐஸ்வர்யா, அனிஷா ஐஸ்வர்யா, அசோக் பாண்டியன், பாக்கியலட்சுமி, நவீன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த சீரியலில் இணைந்துள்ளனர். 


விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக உள்ள சண்டகோழி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் மே 8 ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Leo Shooting Spot : வேகமெடுக்கும் லியோ ஷூட்டிங்... விஜய் - த்ரிஷா டூயட்டுக்கு பிரம்மாண்ட செட்... விரைவில் சென்னை வரும் சஞ்சய் தத்!


Actor Jiiva: திரைப்படமாக உருவாகும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு...ஹீரோவாக நடிக்கும் ஜீவா...