எதிர்நீச்சல் சீரியல் வரப்போகும் நாட்களில் மிகப்பெரிய அளவில் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் என நடிகை சத்யபிரியா தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
2003 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான தமிழ் சீரியல்களில் கோலங்கள் தொடரை யாராலும் மறக்க முடியாது. திருச்செல்வம் இயக்கிய இத்தொடரில் நடிகை தேவயானி கதையின் நாயகியாக நடித்திருந்தார். இதனிடையே நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' என்ற தொடரை இயக்கி வருகிறார். இதில் திருச்செல்வத்துடன் பல சீரியல்களில் பணியாற்றிய நடிகை சத்யபிரியா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
1973 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த சத்யபிரியாவுக்கு இது 50வது ஆண்டாகும். ஏராளமான படங்கள், சீரியல்களில் நடித்துள்ள அவர் அனைவருக்கும் பிடித்தமான பிரபலங்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே எதிர்நீச்சல் சீரியல் தொடர்பாக அவர் பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளை நிறைவு செய்த சத்யபிரியா
ரொம்ப சந்தோஷமா இருக்குது. சினிமாவுல நடிக்க வந்து 50 வருஷம் ஆயிடுச்சி. இன்னைக்கு தான் ஆரம்பிச்ச மாதிரி இருக்குது. நான் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் என எல்லோரோடும் வேலை பார்த்துள்ளேன். அதேபோல் 7 வருஷம் கோலங்கள் சீரியல்ல நடிச்சேன். அப்போதெல்லாம் கிடைக்காத வரவேற்பு எதிர்நீச்சல் சீரியல் மூலம் கிடைக்கும் வரவேற்பு புதுசா இருக்கு. இதில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித்தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்குது. இது அந்த சீரியலின் இயக்குநர் திருச்செல்வத்தின் மிகப்பெரிய மேஜிக் தான்.
கோலங்களுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கிய சீரியல்களில் பெரும்பாலும் நான் இருந்தேன். இந்த சீரியலில் முதலில் அப்பத்தா கேரக்டருக்கு கேட்டு 5 மாதம் ஷூட்டிங் தொடங்கவே இல்லை. அப்புறம் என்னை அம்மா கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்தார்கள். அந்த கேரக்டர்ல எல்லா வகையான உணர்வுகளும் இருக்குது. திருச்செல்வம் கூட ஏற்கனவே வேலை பார்த்து இருக்கதால அவரோட எண்ணம் எப்படி இருக்கும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த சீரியலில் ஆதிரை கல்யாணம் தொடர்பான காட்சி மிகப்பெரிய ட்விஸ்டுகளுடன் காத்திருக்கிறது. அதனால் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருவதுபோல ஒளிபரப்பாகிறது. ஆனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
பெரிய திரையை பொறுத்தவரை ரஜினிகாந்திடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், சொன்ன நேரத்துக்கு முன்னால் ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் உடன் காத்திருப்பார். அதேபோல் விஜய் தனது வேலையில் கவனமாக இருப்பார். அஜித் இப்ப எப்படி இருக்கிறார் என தெரியவில்லை. ஆனால் அப்போது செம ஃப்ரெண்ட்லியாக நடந்து கொள்வார். எங்கக்கூட உட்கார்ந்து நல்லா பேசுவாரு. ரொம்ப லவ்லியான நபர் என்றால் அது கார்த்திக் தான். ரொம்ப அவரோட வேலை பார்க்கும் போது ஹேப்பியா இருக்கும் என சத்யபிரியா தெரிவித்துள்ளார்.