Tamizha Tamizha: 90ஸ் கிட்ஸ்க்கு தைரியம் இல்லையா? .. அப்டேட் ஆகாம இருக்கணுமா? - தமிழா தமிழாவில் காரசார விவாதம்..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் இந்த வார எபிசோட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் இந்த வார எபிசோட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகள் எப்போதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தற்போது ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். சிறிய இடைவெளிக்குப் பின் இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம்  “காதல் செட் ஆகாத 90ஸ் கிட்ஸ் vs திருமணம் ஆகாத பெண் பிரபலங்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது.

அப்போது 90ஸ் கிட்ஸ் பகுதியில் இருந்தவர்களிடம், “ உங்களுடைய முதல் கிரஷ் குறித்து கேள்வியெழுப்பப்பட, பலரும் பல பதில்களை கொடுத்தனர். தனக்கு பாடம் எடுத்த ஆசிரியரின் மகள், என் ஊர்க்கார பொண்ணு, அத்தைப் பொண்ணு, காலேஜில் உடன் படித்தவர் என பதில்கள் வந்தது. மேலும் பெயர் கூட சொல்ல முடியாது, காதலை சொல்லவே முடியல, சொன்னா நம்மளை விட்டு ஒதுங்கிருவாங்களோன்னு தோணுச்சி என அதற்கு காரணமும் தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த திருமணமாகாத பெண் பிரபலங்கள் பிரிவில் இருந்த சீரியல் நடிகை சாய் காயத்ரி, ‘அப்டேட் ஆகாம இருந்தா தான் 90ஸ் கிட்ஸ். நானும் ஒரு 90ஸ் கிட்ஸ் தான். அங்கே ஒருத்தர் சொன்னார். எனக்கு கிரஷ்னா என்னன்னு தெரியாது என சொன்னார். உண்மையிலேயே கிரஷ், பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி, லவ் என 2கே கிட்ஸ் வச்சிருக்கிற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதே 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியாது. தொடர்ந்து பேசிய இன்னொருவர், “இவங்க யாருக்குமே தைரியம் இல்லைன்னு தோணுது. கிரஷ் பொண்ணை, லவ்வரா மாத்தி, அவங்களை மனைவியா மாத்துறதுக்கு தைரியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என கூறுகிறார். 

தொடர்ந்து பேசிய இன்னொரு பிரபலம், ‘முதலில் வெளித்தோற்றம் மிக முக்கியம். அடுத்தது பேசுற விதம். அதுவே ஒரு பெண்ணை ஈர்ப்பதற்கு காரணமாக அமைகிறது. இப்ப இருக்கிற 2கே கிட்ஸ் பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. இங்க எதிர்ல இருக்கிற எல்லோரும் அப்படி இல்லன்னு தோணுது’ என தெரிவிக்கிறார். இதைக்கேட்டு 90ஸ் பகுதியில் இருந்த ஒருவர், “எங்களுக்கு பயமா அதெல்லாம் இல்லை. அந்த பொண்ணை சங்கடப்படுத்தி விடுமோ என நினைக்கிறோம். குடும்பத்தில் பிரச்சியை ஏற்படுத்துற விஷயத்துக்கு நாங்க போக மாட்டோம்” என தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola