வயாகாம்18-ன் கலர்ஸ் தமிழ், பொழுதுபோக்குத் தொலைக்காட்சியானது ஜூலை 30-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மிகவும் பிரபலமான திகில் திரைப்படமான  ‘பூஉஉஉ’  படத்தை, சிறப்பு பார்ட்னரான போத்திஸுடன் இணைந்து ஒளிபரப்பவுள்ளது.


இந்த 'மூவி ஆஃப் தி மன்த்' திரைப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ், சர்வந்த் ராம் கிரியேஷன்ஸ் மற்றும் ஷிரடி சாய் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை விஜய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், விஷ்வக் சென், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன், வித்யா ராமன், பிருத்வி ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார். மதுசூதனன் ரகோத்தமன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.  சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் பணியைச் செய்துள்ளார்.


உலகத் திரைப்பட பிரீமியர் படமான  ‘பூஉஉஉ’ குறித்து இயக்குநர் விஜய் கூறும்போது, “கரோனா 2-வது அலையின்போது இந்தப் படத்துக்கான ஐடியா உருவாகி, ஷூட்டிங் நடத்தப்பட்டது. இந்தப் படத்துக்காக திரையில் வந்தவை அனைத்தும் சம்பந்தப்பட்ட அனைவரின் கடின உழைப்பின் விளைவாக உருவானதாகும். பரந்த பார்வையாளர்களை  ‘பூஉஉஉ’ படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழியாக சென்றடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த விஷயத்தில் நாங்கள் ஒரு குழுவாக உற்சாகத்தில் இருக்கிறோம்” என்றார்.


நடிகை மஞ்சிமா மோகன் கூறும்போது, “பல்வேறு நட்சத்திர நடிகர், நடிகைகளுடன் இணைந்த இந்த  ‘பூஉஉஉ’ படத்தில் நானும் ஓர் அங்கமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி. பெண்கள் ஒன்றிணைந்து அற்புதமான ஒன்றை உருவாக்குவதை நான் விரும்புகிறேன். எனது காலில் காயம் இருந்தாலும் சில்வாவுடன் இணைந்து இந்தப் படத்தில் அபாரமான ஸ்டண்ட் காட்சிகளை செய்திருக்கிறேன். இயக்குநர் விஜய் நன்றாக புரிந்து கொண்டு செயல்படுபவர். படத்தில் பணிபுரியும் போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் வார இறுதிக்கு ஏற்ற அற்புதமான திகில் திரைப்படம்” என்றார்.


திகில் புத்தகத்தைப் படித்து ஹாலோவீன் இரவைக் கொண்டாட முடிவு செய்யும் இருபது வயதுகளில் இருக்கும் 4 பெண்களைச் சுற்றியே ‘பூஉஉஉ’ கதை நகர்கிறது. அவர்கள் அந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கும் போது, புனையப்பட்ட கதைக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான இடைவெளி குறைந்து நிஜம் போலவே தெரிகிறது. மேலும் பெண்கள் விருப்பமின்றி ஒவ்வொரு கதையிலும் ஈர்க்கப்படுகின்றனர்.


கியாரா (ரகுல் பிரீத் சிங்) ஒரு வேடிக்கையான மற்றும் விளையாட்டு ஆர்வம் கொண்ட பெண். அவள் தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாள். பல வருடங்களாக ஹாலோவீனைக் கொண்டாட விரும்பி வந்த அவள், இறுதியாக அவள் தன் திட்டத்தை (ஹாலோவீன் இரவு கொண்டாட்டம்) செயல்படுத்துகிறாள்.


இந்தக் கொண்டாட்டத்துக்காக தனது 3 தோழிகளான ரித்து , அருணா மற்றும் காவ்யா ஆகியோரை அழைக்கிறாள். ஹாலோவீன் பார்ட்டியை தொடங்கிய சிறிது நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் தடை ஏற்படுகிறது. அப்போது, நேரத்தைப் போக்குவதற்காக கியாரா, ஒரு திகில் நாவலை எடுத்துப் படிக்கிறாள். மேலும் அப்போது புத்தகத்தின் ஆசிரியர் அதை எழுதிய பிறகு இறந்துவிட்டார் என்றும் கியாரா மற்றவர்களை எச்சரிக்கிறாள்.


அந்தப் புத்தகத்தில் அவர்கள் ஒரு அத்தியாயத்திலிருந்து மற்றொரு அத்தியாயத்துக்கு முன்னேறும்போது, அவர்களின் சுற்றுப்புறங்களிலிருந்து வினோதமான ஒலிகள் வெளிவரத் தொடங்கி, அவர்களிடையே குழப்பத்தையும் அமைதியின்மையையும் கூட்டுகின்றன. இறுதி அத்தியாயத்தை அடையும் போது, அவர்கள் ஆகாஷ் (விஷ்வக் சென்) என்ற அமானுஷ்ய விஞ்ஞானி மற்றும் அவரது காதலி மீரா (ரெபா மோனிகா ஜான்) பற்றிய கதையை எதிர்கொள்கின்றனர்.


படிப்படியாக,4 தோழிகளும் தாங்கள் படிக்கும் கதையின் உண்மைகள் தங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்கின்றனர். அவர்கள் இதைக் கண்டுபிடிக்கும்போது என்ன நடக்கிறது? மீதமுள்ள கதைகள் எவ்வாறு வெளிவருகின்றன? என்பதை ஜூலை 30, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஹாலோவீன் வகை திரில்லரான இந்த திரைப்படத்தை பாருங்கள்.