ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகா சொன்ன திட்டத்தால் ஜெயிலில் சிலர் சீதாவை கொல்ல வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சீதா ஜெயிலர் ரூமை நோக்கி ஓட இவர்களும் பின் தொடர்ந்து கொண்டே வருகின்றனர்.ஜெயிலர் ரூமில் யாரும் இல்லாததால் அதிர்ச்சியாகும் சீதா அங்கிருந்து வெளியே ஜெயிலில் இருக்கும் ரோட்டுக்குள் ஓடி வந்து ஒரு போலீஸ் மீது இடிக்க அது சீதாவின் அப்பா ராஜசேகர் தான் என தெரிய வருகிறது.


அப்பா மகள் இருவரும் பாசத்தை வெளிப்படுத்த இதை பார்த்த ரவுடிகள் சீதாவை இப்ப கொல்ல முடியாது என திட்டத்தை கை விடுகின்றனர், ஜெயிலர் உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும், நேர்மையான போலீஸ் காரர்.. நிச்சயம் நீயும் தப்பு பண்ணிருக்க மாட்ட என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.. உன்னை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறார்.


இதனை தொடர்ந்து இங்கே மஹா ஆபிசில் அந்த இன்ஸ்பெக்டர் இப்போதைக்கு சீதாவை கொல்ல முடியாது, கொஞ்சம் டைம் ஆகும் என்று சொல்ல மகா கோபப்படுகிறாள். எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன், சீதாவை கொல்லனும் என ஆவேசப்படுகிறாள். மறுபக்கம் ராஜசேகர் வீட்டு சாப்பாட்டை சீதாவிற்கு கொடுக்க அவள் அம்மா ஏன் வரவில்லை என்று கேட்க உன்னை இப்படி பார்த்தா அவ அழுதுகிட்டே இருப்பா, அதனால் தான் கூட்டிட்டு வரவில்லை என்று சொல்கிறார்.


சீதாவும் செல்லம்மாவும் வீட்டு சாப்பாட்டை ரசித்து சாப்பிட ராஜசேகர் அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.அடுத்து சீதா இன்னும் இரண்டு நாளில் நான் வெளியே வந்துருவேன் என்று சொல்லி ராஜசேகரை அதுவரை சென்னையில் இருக்க சொல்கிறாள், முதலில் முடியாது என்று சொல்லும் அவர் பிறகு ஒப்பு கொள்கிறார். அடுத்ததாக ராம் வீட்டில் சீதாவுடனான நினைவுகளை நினைத்து வருத்தப்பட மீரா சீதா உனக்கு இன்னொரு அம்மா, உன் அம்மா தான் சீதா ரூபத்துல வந்திருக்காங்க, மதுமிதாவுக்காக தான் அவ ஜெயிலுக்கு போயிருக்கா என்று சொல்ல ராம் மற்றும் மதுமிதா இருவரும் இதனை கேட்டு வருத்தப்படுகின்றனர்.