ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்‌.நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த அன்னலட்சுமி மாமியார் வேதநாயகி அன்னலட்சுமி வேலை வாங்கி வருகிறார்.


இன்றைய எபிசோடில் பாட்டி முடிவு என்ன சொல்ல போகிறது என்கிற பதட்டத்துடன் அனைவரும் காத்திருக்க, பாட்டி பாயை எடுத்து போட்டு தூங்கப் போகிறார். இதனால் அனைவரும் ஷாக்காக பார்க்க, பாட்டி எனக்கு தூக்கம் வருது காலைல பார்த்துக்கலாம் என சொல்கிறார்.அடுத்ததாக பாட்டி மாணிக்கத்தை அழைத்து நான் என்ன தீர்ப்பு சொல்லனும் என கேக்க, மாணிக்கம் நீங்க தான் சொல்லனும் என சொல்கிறார்.


மேலும் பாட்டி அவரிடம் அன்னம் அவ பையன் படிக்கனும். மருமக படிக்க கூடாதுன்னு நினைக்கிறா, அமுதா தான் படிக்கனும்னு நினைக்கிறா, எல்லாரும் இந்த வீட்டுல சுயநலமா யோசிக்கிறாங்க, இந்த வீட்டுக்கு சம்பந்தம் இல்லாத நீ தான் சுயநலம் இல்லாம எல்லாருக்காகவும் யோசிக்கிற நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் என சொல்கிறார்.இதனையடுத்து மாணிக்கம் பாட்டியிடம் அமுதா படிக்கனும்னு சொல்றது சுயநலமா என்னன்னு எனக்கு தெரியாது.


ஆனா அமுதா இந்த வீட்டுக்காக எல்லாத்தையும் பண்ணிருக்கா, அவ இங்க வரலேன்னா இந்த வீடே சின்னாபின்னாமாயிருக்கும், அவ ஆசைப்பட்டு படிக்கனும்னு நினைக்கிறா அதை தடுக்குறது தப்புன்னு நான் நினைக்கிறேன் என சொல்கிறார்.அதன் பிறகு சிதம்பரமும் செல்வாவும் செந்தில் வீட்டிற்கு வர, வடிவேலு சிதம்பரத்தை அவமானப்படுத்த, செல்வா வருகிறார். செல்வாவை பார்த்ததும் வடிவேலு பம்ம பாட்டி சிதம்பரத்தை பார்த்து எதுக்காக இங்க வந்துருக்கீங்க என கேக்க, உங்க முடிவு என்னன்னு தெரிஞ்சிக்கிடலாம்னு வந்தோம் என சொல்கிறார்.


இதனையடுத்து பாட்டி செந்திலிடம் அமுதாவை நல்லா பார்த்துப்பியா என கேக்க செந்தில் பார்த்துப்பேன் என சொல்ல பாட்டி பரமுவிடம் இனிமே இந்த வீட்டுலயே இருக்க கூடாது உடனே கிளம்பிரு என சொல்கிறார்.