சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் முதலிரவுக்கு கரிகாலன் தயாராக இருக்க, "என்னால அவனை புருஷனா ஏத்துக்க முடியாது" என குணசேகரனை கத்திவிடுகிறாள் ஆதிரை.


இருந்தாலும் விடாப்பிடியாக அவளை தரதரவென இழுத்து ஜான்சி ராணி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறேன் என சொன்னதும் வேறு வழியில்லாமல் சடங்குக்கு சம்மதம் சொல்கிறாள் ஆதிரை. காத்திருந்த கரிகாலனுக்கு பெரிய ஆப்பாக, ஆதிரை ”எனக்கு அருணைத்தான் பிடித்து இருக்கிறது.. நான் அவரை தான் விரும்புகிறேன். மரியாதையா நீ ஒதுங்கிப் போய்விடு என மிரட்டி விடுகிறாள்”  மறுபக்கம் கௌதமை, ஜீவானந்தம் ஜனனியின் நண்பன் என தெரிந்த பிறகும் நம்புவதால் ஏதாவது சிக்கலில் சிக்கி விட கூடும் என தனது பயத்தை வெளிப்படுத்துகிறாள் பர்ஹானா. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 



அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஆதிரை கரிகாலனிடம் "வெளியில் சென்றதும் ஃபர்ஸ்ட் நைட் நல்லபடியா முடிஞ்சதா என யாராவது உன்னிடம் கேட்டா நீ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அப்படின்னு சொல்லணும்" என கண்டிஷன் போடுகிறாள். அழுது கொண்டே கரிகாலன் "என்னை பார்த்தால் பாவமா இல்லையா" என்கிறான். எல்லாம் முடிஞ்சு போச்சுயா மாமா என புலம்பிக்கொண்டே வெளியில் வருகிறான் கரிகாலன். 



குணசேகரன், கரிகாலன் மற்றும் ஞானம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். யாராவது நேற்று என்ன நடந்தது என கேட்க மாட்டீர்களா என திறுதிறுவென முழித்து கொண்டு இருந்த கரிகாலனை பார்த்து ஞானம் "என்ன அப்படி முழிக்கிற" என கேட்டதும் 'நேத்து...' என ராகம் போட்ட கரிகாலனிடம் 'நேத்து வியாழக்கிழமை... இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுக்கு என்ன இப்ப' என சொல்லி வாயை அடைத்து விடுகிறார் குணசேகரன்.


அந்த நேரம் பார்த்து ஜான்சி ராணி வாய் நிறைய பல் தெரியும் அளவுக்கு 'அண்ணே' என சிரித்துக்கொண்டே  வீட்டுக்குள் நுழைகிறாள். அவள் வருவதை பார்த்த அனைவருக்கும் கடுப்பாக இருக்கிறது. அத்துடன் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ முடிவடைந்தது. 



ஆதிரை பிளான் பக்காவா போட்டுத்தான் காய் நகர்த்தி இருக்கிறாள். ஆனால் எத்தனை நாள் கரிகாலன் வாயை மூடி வைக்க முடியும். இது எப்படி பூதாகரம் எடுக்க போகிறது, ஜீவானந்தம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, ஜனனியிடம் கௌதம் உண்மையை சொல்வானா? என்பதை வரும் எபிசோடில் பார்க்கலாம்.