Sita Raman: முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி.. சீதாராமன் சீரியலின் முதல் எபிசோட் அப்டேட் இதோ..!

ராம் குறித்து கேட்டறியும் சீதா அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விஷயத்தை அறிந்து இந்த கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நல்ல பெண்ணாக உங்களுக்கு கிடைப்பாள் என சொல்கிறாள். 

Continues below advertisement

ஜீ தமிழில் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ள சீதா ராமன் சீரியலில் முதல் நாளில் இருந்தே முழுக்க முழுக்க காதல் காட்சிகள் இடம் பெறுவது ரசிகர்கலை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் சேனலில் அடுத்ததாக சீதா ராமன் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாகவும், ஜூஜி நாயகனாகவும் நடிக்க உள்ளனர். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். 

இன்றைய எபிசோடில் குலசேகரபட்டினம் என்ற ஊரில் சீதா தனது குடும்பத்துடன் வாழ்ந்து வர தசரா பண்டிகைக்காக அவளது குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வருகின்றனர்.  மறுபக்கம் மகாலட்சுமி  அறிமுகம் செய்யப்படுகிறாள். தன்னுடைய மகன் ராமிற்காக அழகான பெண்ணை பார்த்து இருக்க மகாலட்சுமியின் தொழில் எதிரி அந்தப் பெண்ணை கடத்தி விடுகிறான். அவர்களிடமிருந்து மகாலட்சுமி அந்தப் பெண்ணை மீட்டு அழைத்து வருகிறாள்.

இருப்பினும் இந்த பிரச்சனையில் ஏற்பட்ட சண்டையில் அந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட, தன்னுடைய மகனுக்கு பார்க்கும் பெண்ணுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என சொல்லி அந்த பெண்ணை மகாலட்சுமி நிராகரிக்கிறாள். இதனையடுத்து தசரா பண்டிகைக்காக தன்னுடைய சொந்த ஊரான குலசேகரபட்டினம் வரும் மகாலட்சுமி கோயில் திருவிழாவில் சீதாவின் அக்கா மதுமிதாவின் அழகை பார்த்து வியந்து தன்னுடைய மகனுக்கு இந்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறாள். 

தொடர்ந்து ராம் கோயிலுக்கு வரும்போது சீதாவின் வண்டி ரிப்பேர் ஆகி நிற்க அவளுக்கு உதவி செய்கிறான். அப்போது ராம் குறித்து கேட்டறியும் சீதா அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விஷயத்தை அறிந்து இந்த கோயிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நல்ல பெண்ணாக உங்களுக்கு கிடைப்பாள் என சொல்கிறாள். 

பின்னர் கோவிலுக்கு வரும் ராமும் சீதாவின் அக்கா மதுமிதாவின் அழகை பார்த்து மயங்குகிறான். பிறகு மதுமிதாவை சந்தித்து பேச அவள் ராமிடம் ஒரு மாலையை கொடுத்து அனுப்புகிறாள். சீதா சொன்னது போலவே இந்த கோவிலில் வேண்டிக் கொண்டதும் அழகான பெண்ணை கண்டதால் சீதாவுக்கு நன்றி கூறி மதுமிதா கொடுத்த மாலையை அவளது கழுத்தில் போட்டுவிட்டு செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement