காதலித்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வந்த இவர்கள் திடீரென இரு மதத்தின் முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கொஞ்ச காலத்திலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடி உதை, போலீஸ் புகார் என பிரச்சனை முற்றியது. 



கர்ப்பிணியாக இருந்த தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக அர்னவ் மீது திவ்யா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட அர்னவ் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். அதற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் அர்னவின் முன்னாள் காதல், கள்ளத்தொடர்பு, பண மோசடி என ஏராளமான குற்றங்களை ஒன்றின்பின் ஒன்றாக அவர் மீது அடுக்கி வந்தார் திவ்யா. கடுப்பான அர்னவ், திவ்யாவின் கள்ள தொடர்பு பற்றி வெளியிட்டார். இருவருக்கும் இடையில் பல வகையில் பிரச்சனைகள்  முற்றி வந்த நிலையில் சமீபத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் திவ்யா. 


குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் திவ்யா தற்போது படப்பிடிப்பு ஸ்பாட்டிற்கு குழந்தையுடன் கலந்து கொள்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். திவ்யாவின் அந்த போஸ்டுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்தன. பலரும் திவ்யாவிற்கு ஆறுதல் கூறி வந்தனர். 


சமீபத்தில் கூட திருமணத்தின்போது இருவரும் சேர்ந்து வசித்து வந்த திருவேற்காட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தம் கொண்டாடி பிரச்சனை வந்தது. அர்னவ், வக்கீல் மற்றும் பவுன்சர்களுடன் சென்று திவ்யாவை வெளியேற்றுவதற்காக சென்று பிரச்சனை செய்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் வந்து இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சண்டையை விலகிவிட்டனர். இரு தரப்பினரையும் அவர்கள் தரப்பு ஆதாரங்களையும், ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி அவர்களை வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.  


 




சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா மீண்டும் தனது குழந்தையின் முகத்தை மட்டும் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் திவ்யாவின் வாய்ஸ் மட்டுமே வருகிறது. அதில் திவ்யா பேசுவதற்கு எல்லாம் குழந்தை ரியாக்ட் செய்கிறது. அதற்கு திவ்யா கேப்ஷனாக என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய பகுதிகள் நிறைவு பெற்றுவிட்டன. அதில் அடுத்த பாகமாக என்னுடைய அழகான குழந்தை என குறிப்பிட்டுள்ளார்.