Seetha Raman:நான்சியிடம் சிக்கிய அர்ச்சனா.. பளாரென விழுந்த அடியும் அடுத்த அதிரடி ப்ளானும் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்

Continues below advertisement

சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜசேகர் ராம் ஸ்டேஷனுக்கு டிரான்ஸவர் வாங்கி கொண்டு வந்த  நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது நான்சி அர்ச்சனாவை கூட்டி கொண்டு ஓரிடத்திற்கு கிளம்ப அர்ச்சனா எங்கே என்று கேட்க நான்சி எதையும் சொல்லாமல் கூட்டி வருகிறாள். அதன் பிறகு ஒரு குடோனிற்கு வருகின்றனர். மகாவை கொன்னது நீதானே என்று நான்சி கேட்க அர்ச்சனா இல்லை என்று சமாளிக்கிறாள். 

உடனே நான்சி பளாரென அறைந்து எனக்கு எல்லாமே தெரியும், கொஞ்சம் அங்க பாரு என்று கல்பனாவை வாயை அடைத்து கட்டி போட்டிருப்பதை காட்ட அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு நாங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணோம். ஆனால் நாங்க கொல்லல என்று சொல்கிறாள். 

நான்சி எனக்கு கல்பனாவை வச்சி சில வேலைகள் இருக்கு என்று சொல்லி அவளை அர்ச்சனா கெட்டப்பிற்கு மாற்றி வீட்டிற்கு  அழைத்து வருகிறாள். இங்கே வீட்டில் ராமும் ராஜசேகரும் வர சீதா அப்பாவை ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறாள். ராம் ராஜசேகர் டிரான்ஸர் வாங்கிட்டு வந்த விஷயத்தை சொல்லி இந்த ஏற்பாடுகளை செய்தது தெரிய வருகிறது. 

அடுத்து நான்சி கல்பனாவுடன் வீட்டிற்கு வர அது அர்ச்சனா என்று நினைத்து அவளையும் சுபாஷையும் நிற்க வைத்து கல்யாண நாளை கேக் வெட்டி கொண்டாட வைக்கின்றனர். இப்படியான  நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola