தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோட் முடிவில் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி ரகுராம் செய்தது தவறு அவருக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என அவரை உட்கார வைத்து மொட்டை அடிப்பது போல் கனவு கண்டு ஜானகி அதிர்ச்சி அடைந்து எழுகிறாள்.


சந்தியா ராகம்:


சந்தியா ராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜானகி ஊர் மக்கள் சேர்ந்து ரகுராமுக்கு தண்டனை கொடுப்பது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது ஜானகி ரகுராம் எழுந்ததும் அவரிடம் கெட்ட கனவு கண்டதாகவும் கோவிலுக்கு போயிட்டு வரலாம் எனவும் சொல்ல, ரகுராமும் சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பிறகு இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல ரமணி திடீர்னு என்னப்பா கோவிலுக்கு என்று கேள்வி எழுப்ப ஜானகி உண்மையை சொல்ல வர ரகுராம் கண்ணை காட்டியதும் அமைதியாகி விடுகிறாள். 


அடுத்து நடக்கப்போவது என்ன?


அதன் பிறகு எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி வர இங்கே கோவிலில் மாயா பரதநாட்டியம் ஆட அதை பார்த்த சீனுவிற்கு அவள் மேல் காதல் ஏற்படுகிறது. பிறகு சாமியார் ஒருவர் பல வருஷங்களுக்கு முன்னாடி உங்க வீட்ல ஒரு பொண்ணால ( சந்தியா ) நடந்த பிரச்சனை இப்போ உங்க வீட்டு பொண்ணால திரும்பவும் நடக்க போகுது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். மாயாவால் தான் பிரச்சனை என கணக்கு போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க 


Siragadikka Aasai: சிக்கிய ரோகிணியின் ரீல் மாமா.. சந்தேகத்தில் முத்து குடும்பம் - சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!


Nivetha Pethuraj: நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நான் கில்லி.. அசத்திய நிவேதா பெத்துராஜ்!