ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'அண்ணா'. இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் பரணி, சண்முகம் மற்றும் கார்த்திக் என இருவரையும் தனது கையில் மருதாணி வைக்க சொல்லி யார் வைப்பது அதிகம் சிவக்கிறதோ அவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என சொல்கிறாள். 



பிறகு கார்த்திக் ஒரு பக்கம் மருதாணி வைக்க சண்முகம் இன்னொரு பக்கம் மருதாணி வைத்து விட தங்கைகள் அனைவரும் இப்படி வை அப்படி வை என அவனுக்கு சொல்லி கொடுக்கின்றனர். அதற்கு பிறகு பரணி முதலில் கார்த்திக் மருதாணி வைத்த கையை கழுவ அது நன்றாக சிவந்து இருக்கிறது. பிறகு சண்முகம் வைத்த கையை கழுவ அது கார்த்திக் வைத்த கையை விட இன்னும் அதிகமாக செவந்திருக்க தன்னை அறியாத சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறான். அதே போல் ரத்தனாவுக்கு வெங்கடேஷ் மாறு வேடத்தில் வந்து மருதாணி வைத்த நிலையில் அவளது கையும் இன்னும் அதிகமாக சிவந்து இருக்கிறது.


இதை தொடர்ந்து ரத்னா ஒரு ரூமில் உட்கார்ந்திருக்க அங்கு வரும் வெங்கடேஷ் தனது மாறுவேடத்தை கலைத்துவிட்டு அவளிடம் பேசி கொண்டு இருக்க தங்கைகள் வந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அண்ணன் பார்த்தா பிரச்சனையாகிவிடும். வெளியே போ என சொல்ல அவன் உங்க அக்கா கிட்ட பேசாம போக மாட்டேன் என உறுதியாக இருக்கிறான். 


பிறகு ”அன்னைக்கு முத்துப்பாண்டி என்ன அடிச்சு அவமானப்படுத்தி உட்கார வைக்கும் போது நீ எதுக்கு அழுத” என்று கேட்க ரத்னா பதில் சொல்ல முடியாமல் நிற்க ”உனக்கு என் மீது இருக்கும் காதல் தான் காரணம்” என வெங்கடேஷ் சொல்கிறான், இதை  பார்த்த தங்கைகள் வருத்தப்பட அதே சமயம் பார்த்து சண்முகம் வந்து கதவைத் தட்ட இவனை பீரோவுக்கு பின்னாடி மறைத்து வைக்கின்றனர். 




கதவை திறக்க எவ்வளவு நேரம் என சண்முகம் கேட்க தங்கைகள் உடை மாற்றி கொண்டிருந்ததாக சொல்லி சமாளிக்கின்றனர். அதனை தொடர்ந்து தங்கைகளை சாப்பிட கூப்பிடும்  சண்முகம் அங்கு மேஜையின் மீது இருக்கும் வெங்கடேஷின் தலைப்பாகையை பார்த்து யார் இங்க வந்தது என கேட்க காபி கொடுக்க ஒருத்தர் வந்தார் அவர் மறந்து வைத்து விட்டு சென்றதாக சொல்லி சமாளிக்கின்றனர்.


பிறகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற எல்லா நடந்திருக்க முதலில் மாப்பிள்ளை என நினைத்து ஒரு பாட்டு பாடுகிறார். அதன் பிறகு பரணியை நினைத்து பாட்டு பட போவது யார்? கார்த்தியா? சண்முகமா? இருவருக்குமான போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதை இனி வரும் அண்ணா சீரியலின் எபிசோட்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.