சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரான எதிர் நீச்சல் தொடரில் நேற்றைய எபிசோடில் பல ஸ்வாரஸ்யங்கள் நடந்தன. சக்தியையும் ஜனனியையும் வீட்டை விட்டு விரட்டிய குணசேகரன் இன்றும் போடும் டிராமா ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருந்தது.


 



விசாலாட்சி அம்மா எதுவும் சாப்பிடாமல் மகளை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார். பேரன் பேத்திகள் சொல்லியும் கேட்கவில்லை. அந்த நேரம் பார்த்து வரும் குணசேகரன் விசாலாட்சி அம்மாவிடம் சக்திக்கு போன் செய்து வர சொல்லுமாறு கேட்கிறார். அனைவரும் ஒரே அதிர்ச்சியாக இருக்கிறது. "எனக்கும் அவன் மேல கோபம் தான். ஆனால் பெற்ற பிள்ளை போல வளர்த்து விட்டேனே அவன் எங்க போய் கஷ்டப்படுவானோ என பதற்றமாக இருக்கிறது" என்கிறார்.


அதற்கு அம்மா "நீ யாருக்காகவும் பதறவும் வேண்டாம் ஒதரவும் வேண்டாம். அது தான் ஒவ்வொருத்தரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிகிட்டு இருக்கியே. இந்த வீட்டில இருக்குற நாங்களும் தலையாட்டி பொம்மையா இருந்துட்டு போறோம்" என்கிறார். 'இனியாவது அவன் சொந்த காலில் நிக்கட்டும். அவனை கூட்டிட்டு வந்து உன்னோட கால் அடியிலே போடணும் என பார்க்காத' என்கிறார் விசாலாட்சி.


அதற்கு குணசேகரன் 'எனக்கு உங்க மேல எல்லாம் எவ்வளவு பாசம் இருக்கு என எனக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு இன்னும் அந்த பய மேல கோபமா தான் இருக்கு. ஆன வெள்ளந்தியா இருக்கானே அது தான் வேதனையா இருக்கு' என சொல்லவும் ஈஸ்வரி உடனே 'இது என்ன புது டிராமாவா இருக்கு. அவனை அவமானப்படுத்தி வீட்டை வெளியே வெரட்டி அடிச்சீங்க இப்போ ஆடிட்டர் வந்து காத கடிச்சதும் மாத்தி  பேசுறீங்க' என்கிறாள்.


குணசேகரன் டிராமா:


குடும்ப விஷயத்தில் தலையிடாத என அவளை மிரட்டிவிடுகிறார் குணசேகரன். 'கல்யாணம் பண்ணிட்டு ப்ரெண்ட்ஸா இருக்காங்களாம். அவ அவனை வேலைக்காரனா வைச்சுக்குவா. நான் பெத்த பையன் மேல கூட பாசம் காட்டி வளர்த்தது இல்ல. சக்தியை தானே என்னோட பிள்ளையாட்டம் வளர்த்தேன். என்னோட பிள்ளைய வரச் சொல்லுங்க' என அழுது டிராமா செய்கிறார் குணசேகரன். சக்திக்காக ஜனனியையும் ஏற்று கொள்கிறேன் என சொல்கிறார் குணசேகரன். சக்திக்கு போன் செய்து விசாலாட்சி அம்மா வரச் சொல்கிறார். இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதையுமே கேட்டதில்லை. உனக்கும் ஜனனிக்கும் எந்த அவமானமும் நடக்காம நான் பாத்துக்குறேன் என்கிறார். 



சக்தியும் ஜனனியும் வீட்டுக்கு வருகிறார்கள். 


 



நந்தினி அவர்களை பார்த்து ஏன் இங்க திரும்ப வந்த என திட்டுகிறாள். அவர்கள் பேசுவதை மேலே இருந்து பார்த்த குணசேகரன் உள்ளே வா சக்தி என அழைக்கிறார். 'உனக்காக தான் காத்துக்கிட்டு இருந்தேன். ஏதோ கோபத்தில தான் அண்ணன் பேசிட்டாரு என்பதை புரிந்து கொண்டு கூப்பிட்டதும் திரும்பி வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்' என்கிறார்  குணசேகரன். சக்தி உடனே 'உங்களுக்காக ஒன்னும் நான் வரல. அம்மா சொன்னதுக்காக தான் வந்தேன்' என்கிறான். 


கதிர் சக்தியை பார்த்து நக்கலாக பேச 'நீ வாய மூடு ஏதாவது பேசின வெட்டிட்டு போய்கிட்டே இருப்பேன். ஊருக்குள்ள சண்டித்தனம் பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருக்க உனக்கே இப்படி இருந்தா எனக்கு எப்படி இருக்கும். பொத்திகிட்டு நில்லு' என சக்தி சொல்ல மீண்டும் அடிக்க கை ஓங்கி கொண்டு போகிறார்கள் சக்தியும் கதிரும்.


அவனாவது ரோஷப்பட்டு பேசுகிறான் நீங்கள் அப்படியே வாயை மூடிக்கிட்டே தான் இருக்கீங்க என ரேணுகா சொல்லவும் 'நான் அவரோட பணத்துக்காக தான் அடங்கி போகிறேன் என நினைக்காதீர்கள். பணம் இல்லாத காலத்தில் கூட அவர் எப்படி எங்களை வளர்த்தார் என்பது எங்கு தான் தெரியும். அவர் பட்டினி இருந்து எங்களை சோறு போட்டு வளர்த்து இருக்கார். அந்த விஸ்வாசத்துக்காக தான் அவரோட நான் இன்னைக்கு இல்ல என்னைக்குமே நான் இருப்பேன்'   


 



நான் யாரையும் அடிமையாக வைக்கவில்லை. உன்னோட சொத்தை பிரித்து கொடுத்து விடுகிறேன். நீ வெளியில போய் சந்தோஷமாக இரு. இந்த சொத்தை நான்கு பங்காக பிரித்து விடுகிறேன்' என்கிறார் குணசேகரன். சக்தி உடனே 'இந்த சொத்து எனக்கு வேண்டாம். இது நீங்க சம்பாதித்த சொத்து எனக்கு தேவையில்லை. முதுகெலும்பு இல்லாத பயலால என்ன முடியும் என அப்போ பாருங்க' என்கிறான் சக்தி. 'அம்மாவுக்காக தான் இங்க வந்தோம். அவுட் ஹவுஸ்ல தங்கிக்கிறோம். என்ன வாடகையோ அதை தந்து விடுகிறோம்' என்கிறான் சக்தி. அம்மாவுக்காக தான் அவங்க இந்த வீட்டுக்கு வந்து இருக்காங்க அதனால இந்த வீட்ல எல்லா உரிமையோடவும் இருக்கட்டும். ஆனால் இனிமேல் மாநாடு போடுவது எல்லாம் நடக்க கூடாது என ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்டுவிட்டு செல்கிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.