தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவ், இசை ஆகியோர் திட்டமிட்டு ஸ்ரீஜாவை ஆதாரம் இருப்பதாக சொல்லி அழைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வீடியோவை காட்டிய ஸ்ரீஜா:
அதாவது, ஸ்ரீஜா அங்கு வந்த ஆதாரத்தை கேட்க இசை இதனை வீடியோவாக எடுத்து அதை குடும்பத்தாரிடம் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதனை தொடர்ந்து ஸ்ரீஜா அது ராகவ் தான் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் அங்கு போனேன். அந்த வீடியோவில் ஆதாரம் இருப்பதாக சொல்லி இருக்காங்க அது எங்கே காட்ட சொல்லுங்க என்று கேட்கிறாள்.
கண்டிஷன் போட்ட சுபத்ரா:
பிறகு சுபத்ரா அந்த ஆதாரத்தை கேட்க ராகவ் அமைதியாக நிற்க அப்படி ஒன்றும் இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் சுபத்ரா இனிமே இந்த கல்யாண விஷயத்தில் தலையிட கூடாது என்று இசைக்கு கண்டிஷன் போடுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.