Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஜெயிலுக்குள் இருக்க ரேவதி அவனை பார்க்க முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

புருஷனைப் பார்க்க கிளம்பிய ரேவதி:

அதாவது ரேவதி கார்த்தியை பார்க்க கிளம்ப சந்திரகலா, "நீ எதுக்கு அவனை பார்க்க போற" என்று சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். இதனைத்தொடர்ந்து, ராஜராஜன் "நீ எதுக்கு அவளை ஏற்றி விட்டுட்டு இருக்க" என்று சந்திரகலாவை சத்தம் போடுகிறார், ரேவதி "கார்த்திக் என்னை தொட்டு தாலி கட்டுன புருஷன் அவனை நான் பார்ப்பேன்" என்று கிளம்பி வருகிறாள். 

கார்த்தியை சந்தித்து பேசும் போது எமோஷனலாக அவன் ஆறுதல் சொல்கிறான், சந்திரகலா செய்யும் வேலைகளை சொல்கிறாள். இங்கே சந்திரகலா "கார்த்தியையும் ரேவதியையும் பிரிக்கணும். இல்லனா அவ இப்படி தான் அவனை தேடி போவா" என்று ஏற்றி விட சாமுண்டீஸ்வரி "ஒரு முடிவு கட்டுறேன்" என்று சொல்கிறாள்.

Continues below advertisement

சாமுண்டீஸ்வரியிடம் சண்டையிட்ட ரேவதி:

இதை தொடர்ந்து ரேவதி வீட்டிற்கு வந்து "கேஸை வாபஸ் வாங்குங்க.. என் புருஷனை வெளியே எடுங்க" என்று சொல்லி சத்தம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.