தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நளினி பாட்டு பாடி கல்யாண மண்டபத்தை கலகலப்பாக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

சுபத்ராவுக்கு தெரிய வந்த ரகசியம்:

அதாவது, அடுத்ததாக விஷால் பாட்டு பாட இசை மற்றும் விஷால் இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவது போல வர்ஷினி நினைத்து பார்க்கிறாள். பிறகு இசையை பாட்டு பாட சொல்கின்றனர். 

இசை சிறு வயதில் பாடிய பாடலை திரும்ப பாட சுபத்ராவுக்கு பிளாஷ்பேக் காட்சிகள் வந்து போகிறது. இதனால் இந்த பாட்டை நீ தான் பாடுனியா? உன் அப்பா அம்மா எங்கே? என்று கேட்க அப்பா அம்மா ஒரு ஆக்சிடென்ட்டில் இறந்து விட்டதாக இசை சொல்கிறாள். 

Continues below advertisement

ஸ்ரீஜாவுக்கு அதிகமாகும் கோபம்:

ஸ்ரீஜாவுக்கு என் அம்மாவோட சாவுக்கு நீ தான் காரணமா உன்ன சும்மா விடமாட்டேன் என்று இசையின் மீதான கோபமும் பழிவாங்கும் எண்ணமும் அதிகமாகிறது. அதன் பிறகு மெஹந்தி போட ஆட்கள் மண்டபத்திற்கு வர முதலில் பொண்ணுக்கு தான் மெஹந்தி போடணும் என்று சொன்னதும் அவர்கள் ஸ்ரீஜாவுக்கு பதிலாக இசைக்கு மெஹந்தி போட்டு விடுகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.