தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வர்ஷினி கடத்தப்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை கண்டுபிடித்த இசை:
அதாவது வீட்டில் வர்ஷினி இல்லை என்ற விஷயம் தெரிய வந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ருக்மணி வர்ஷினி லெட்டர் எழுதிவிட்டு சென்றிருப்பதாக சொல்லி ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்க அது வர்ஷினியின் கையெழுத்து இல்லை என இசை நிரூபிக்கிறாள்.
இதனால் வர்ஷினி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, பக்கத்து வீட்டு சிசிடிவி கேமரா காட்சிகளை பார்க்கும்போது வர்ஷினி கடத்தப்பட்டது தெரிய வருகிறது. பிறகு இசை மற்றும் ராகவன் என இருவரும் வர்ஷினியை தேடும் வேலையில் இறங்குகின்றனர்.
தூக்கு கயிற்றில் வர்ஷினி:
மறுபக்கம் வர்ஷினியை ஐஸ் கட்டி நிற்க வைத்து, கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி தற்கொலை செய்து கொள்வது போல ஏற்பாடு செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.