தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா திட்டமிட்டு வர்ஷினியை கடத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இசையைப் பார்த்து கடுப்பாகிய விஷால்:
அதாவது, வர்ஷினியை கடத்தி ஒரு குடோனுக்குள் அடைக்கின்றனர். மறுபக்கம் விஷால் தூங்கி எழுந்து கொள்ள ரூமில் இசை இருப்பதை பார்த்து கடுப்பாகி வெளியே வருகிறான்.
பிறகு வர்ஷினி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்கு, பக்கத்தில் இருக்கும் தனது நண்பனின் ரூமுக்கு வருகிறான். அங்கே வந்து குடிக்க போவதாக சொல்லி தண்ணீர் கேட்க பக்கத்து ரூமின் கதவை தட்டி தண்ணீர் கேட்கின்றனர்.
தற்கொலை செட்டப் செய்யும் ஸ்ரீஜா அப்பா:
விஷாலின் குரலை கேட்டு மயக்கத்தில் இருக்கும் வர்ஷினி கண்திறக்க, அதற்குள் ரவுடிகள் மீண்டும் மயக்க மருந்து அடித்து மயங்க வைக்கின்றனர். ஸ்ரீஜாவின் அப்பா வர்ஷினி தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்து அவளை கொல்ல சொல்கிறார்.
மறுபக்கம் வீட்டில் வர்ஷினி இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.