தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா இசையை சந்தித்து மொத்த உண்மைகளையும் சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

ஒட்டுக்கேட்ட ஸ்ரீஜா:

அதாவது, ரம்யா தான் உண்மைகளை கேட்டு அதிர்ச்சி அடைய இசை ராகவ்வுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல ராகவ் ரம்யாவை மண்டபத்திற்கு அழைத்து வர சொல்கிறான். ஸ்ரீஜா இதை ஒட்டு கேட்டு விடுகிறாள். 

இதை தொடர்ந்து இசை ரம்யாவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்கிற ஸ்ரீஜா ரம்யாவுக்கு போன் செய்து தனியாக வந்து பேச சொல்கிறாள். வண்டியிலிருந்து இறங்கிய ரம்யா தனியாக வந்து பேசிக் கொண்டிருக்கும்போது தனது காரில் மோதி கொல்ல முயற்சி செய்கிறாள் ஸ்ரீஜா. 

Continues below advertisement

ரத்த வெள்ளத்தில் ரம்யா:

ரத்த வெள்ளத்தில் இருக்கும் ரம்யா ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் அட்மிட் செய்கிறாள் இசை. ஸ்ரீஜா டாக்டர் வேடத்தில் ரம்யாவை கொல்ல முயற்சி செய்ய இசை ஸ்ரீஜாவை துரத்துகிறாள். கல்யாண மண்டபத்தில் சுபத்ரா எங்க மணப்பெண்ணை காணவில்லை என்று தேட சிந்தாமணி சமாளிக்க முடியாமல் தவிக்க கடைசி நிமிடத்தில் ஸ்ரீஜா மண்டபத்திற்குள் வந்து நிற்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.