தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதியை சாமுண்டீஸ்வரி காசு வெட்டி போட்டு பிரித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கார்த்திக் உறுதி:

அதாவது, சந்திரகலா நடந்ததை நினைத்து சந்தோசப்பட ரேவதி மிகுந்த வருத்தத்தில் கண்ணீருடன் இருக்கிறாள். இங்கே பரமேஸ்வரி பாட்டி வருத்தப்படுகிறார். 

கார்த்திக் ரேவதி இதை விருப்பப்பட்டு பண்ண மாதிரி தெரியல, அவ நான் வெளியே வரணும்னு செய்த மாதிரி இருக்கு.. என்னையும் ரேவதியையும் யாராலயும் பிரிக்க முடியாது என்று சொல்கிறான். 

Continues below advertisement

விஷத்தை குடித்த ரேவதி:

அடுத்ததாக ரேவதி மனவேதனையில் விஷத்தை குடிக்கிறாள். இங்கே கார்த்திக்கு திடீரென ஏதோ தப்பா நடப்பது போல் உள்மனசு சொல்ல உடனே ரேவதிக்கு போன் செய்கிறான். 

விஷம் குடித்து மயங்கிய ரேவதி போனை எடுக்காததால் கார்த்திக் சந்தேகப்பட்டு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து பார்க்க ரேவதியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைகிறான். உடனே அவளை ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணாதவறாதீர்கள்.