ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சுபத்ரா இசையிடம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இசைக்கு சவால் விட்ட ஸ்ரீஜா:
அதாவது, ருக்குமணி கெஸ்ட் அவுசை விட்டு வெளியேறத் தயாராக சுபத்திரா அவசரப்படாம கொஞ்சம் பொறுமையா இருங்க என்று சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள்.
அதன் பிறகு ஸ்ரீஜா இசையை சந்தித்து உன்னையும் உன் குடும்பத்தையும் இந்த வீட்டை விட்டு துரத்தாம ஓய மாட்டேன் என்று சவால் விடுகிறாள்.
சவாலுக்கு சவால்:
இதைக் கேட்ட இசை உன்ன இந்த வீட்டை விட்டு வெளியே துரத்தி ராகவுக்கும் வர்ஷினிக்கும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று பதில் சபதம் எடுக்கிறாள்.
இதனால் கடுப்பாகும் ஸ்ரீஜா ராகவ்விடம் வந்து விஷயத்தை சொல்ல, ராகவ் என்னைக்காக இருந்தாலும் ஸ்ரீஜா தான் என்னுடைய மனைவி என பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.