ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரி கார்த்தி தம்பி எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று சொல்ல, ரேவதி அவர்களுக்கு ஏன் செய்யணும் என்று கேட்க, கார்த்திக் அத்தை தானே சொல்றாங்க என்று வேலைகளை செய்ய சம்மதம் சொல்கிறான்.
தரையில் அமர்ந்து சாப்பிட சொன்ன மாமியார்:
இதைத் தொடர்ந்து எல்லோரும் கலந்து சாப்பிட வேலைக்காரன் எல்லாம் கீழே தான் உட்கார்ந்து சாப்பிடணும் என்று சாமுண்டீஸ்வரி சொல்லிவிட கார்த்திக் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறான். அப்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் தான் தொப்பை வராது எங்க அம்மா தரையில உட்கார வைத்து தான் சாப்பிட சொல்லுவாங்க என்று சொல்ல, கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் ராஜராஜன், மயில்வாகனம், ரோகிணி என எல்லோரும் தரைக்கு இறங்கி விடுகின்றனர்.
ரேவதியுடன் சேர்ந்த கார்த்திக்:
இதனால் சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா ஆகியோர் மட்டும் தனியாக மேஜையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பிறகு இரவு சந்திரகலாவிடம் சாமுண்டீஸ்வரி கார்த்திக், ரேவதி இருவரும் ஒன்றாக சேர்ந்து தூங்கக்கூடாது பார்த்துக்கோ என்று சொல்ல கார்த்திக் சோபாவில் படுப்பதற்காக பெட்ஷீட் , தலையணை என ஆளுக்கு ஒரு பொருளாக எடுத்து வந்து கொடுக்கின்றனர்.
அதை தொடர்ந்து மயில்வாகனம் ஒரு பொம்மையை தூக்கி போட்டு சந்திரகலாவை திசை திருப்ப ரேவதி கார்த்திக்குடன் வந்து படுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.