தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அம்மாவால் ராகவ், ஸ்ரீஜாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அம்மாவுக்காக ஸ்ரீஜாவை திருமணம் செய்த ராகவ்:
அதாவது ராகவ் மற்றும் ஸ்ரீஜா என இருவரும் மணமேடையில் உட்கார வைக்கப்படுகின்றனர். ராகவ் சுபத்ராவுக்காக வேறு வழியில்லாமல் ஸ்ரீஜா கழுத்தில் தாலி கட்ட வர்ஷினி மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறாள்.
அதன் பிறகு இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். சுபத்ரா ராகவ், ஸ்ரீஜா மற்றும் விஷால், இசை என இரண்டு ஜோடிகளையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று சில பரிகாரங்களை செய்ய சொல்கிறாள்.
ஸ்ரீஜா அப்பாவின் சபதம்:
ஸ்ரீஜா யாருக்கும் தெரியாமல் தனது அப்பாவை வரவைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறாள். அப்போது ஸ்ரீஜாவின் அப்பா அந்த சுபத்ராவை தூக்குல தொங்க வைக்கணும். அப்ப தான் உங்க அம்மாவோட ஆத்மா சாந்தி அடையும் என்று சொல்கிறார்.
இதைத்தொடர்ந்து கோவில் குளத்தில் கால் இணைப்பதற்காக இரண்டு ஜோடிகளும் வருகின்றனர். அப்போது இசை தவறி விழ போக விஷால் அவளை தாங்கி பிடிக்க சுபத்ரா இதை பார்த்து கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.