தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா விஷாலிடம் நைட்டு தவறு நடந்து விட்டதாக சொல்ல விஷால் அதிர்ச்சியடைய இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கண்ணீர்விட்ட விஷால்:

அதாவது, விஷால் ஸ்ரீஜா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து கண் கலங்குகிறான். அவளிடம் மன்னிப்பு கேட்க ஸ்ரீஜா இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறாள். 

அடுத்த நாள் சுப்ரதா வீட்டுக்கு கல்யாணம் பத்திரிகைகள் வர அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். விஷால் லேட்டாக வீட்டுக்கு வர அவனிடம் பத்திரிக்கையை கொடுக்க விஷால் அதை பார்க்கிறான். பின்னாடியே வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா சவாலில் ஜெயிச்சது போல இசைக்கு சைகை காட்ட இசை சந்தேகம் அடைகிறாள். இதுகுறித்து ராகவிடமும் பேசுகிறாள். 

Continues below advertisement

இசையுடன் மாலை மாற்றிய விஷால்:

அதன் பிறகு ஸ்ரீஜா பானுமதிக்கு போன் செய்து வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்ய சொல்கிறாள். இவர்கள் கல்யாண பத்திரிக்கை வைத்து பூஜை செய்வதற்காக கோவிலுக்கு கிளம்பி செல்கின்றனர். அங்கே விஷாலும் இசையும் மாலை மாற்றிக் கொள்ள ஸ்ரீஜா இதைப்பார்த்து கடுப்பாகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.