தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிலையை மீட்டு வந்து பரமேஸ்வரி பாட்டியை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

உண்மையைச் சொல்லச் சொன்ன கார்த்திக்:

அதாவது, காளியம்மா வீட்டில் நாங்க போடுற திட்டம் எதுவும் நடக்க மாட்டேங்குதே என்று வருத்தத்துடன் இருக்கிறாள். மேலும் நல்ல வேலை அந்த குருமூர்த்தி நம்மள காட்டி கொடுக்கல என்று நிம்மதி அடைகிறாள். 

அதன் பிறகு இங்கே பரமேஸ்வரி பாட்டி கும்பாபிஷேகம் நல்லபடியா நடக்க வேண்டும் என்று சொல்ல கார்த்திக் கண்டிப்பாக நல்லபடியாக நடக்கும் என வாக்கு கொடுக்கிறான். அடுத்ததாக வீட்டில் ரேவதி அம்மாவிடம் உண்மையை சொல்லித்தான் ஆகணுமா? என்று கேட்க கார்த்திக் நிச்சயம் சொல்லித்தான் ஆகணும், சாமுண்டீஸ்வரி அத்தை கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க என்ற நம்பிக்கை இருப்பதாக கார்த்திக் சொல்கிறான். 

Continues below advertisement

வாந்தி எடுத்த ரேவதி:

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரேவதி திடீரென வாந்தி எடுக்க வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நல்ல விஷயம் என நினைத்து சந்தோஷப்படுகின்றனர். உடனே டாக்டரை வீட்டிற்கு வர செல்கின்றனர். இந்த சமயத்தில் ரேவதி எனக்கு குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பீங்க என்று கேட்க சாமுண்டீஸ்வரி பொண்ணு பொறந்தா என் அம்மாவோட பேர் வைப்பேன் என்று சொல்கிறாள். 

பிறகு டாக்டர் ரேவதியை பரிசோதனை செய்து பித்த வாந்தி தான் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஏமாற்றம் அடைகிறாள். அதன் பிறகு கார்த்திக் ரேவதி இடம் எதுக்கு என்ன பெயர் வைப்பீங்கனு கேட்ட என்று கேட்க நாளைக்கு அம்மா நம்பள வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டா குழந்தைக்கு பேர் வைக்கணும்ல அதனால தான் கேட்டேன் என்று சொல்கிறாள். 

உண்மையை அறிந்த தீபாவதி:

அடுத்ததாக பரமேஸ்வரி பாட்டி பரம்பரை காப்பு ஒன்றை தேடி எடுத்து கார்த்தியை அவசரமாக வரவைத்து அதை அவன் கையில் கொடுக்க தீபாவதிக்கு கார்த்திக் தான் ராஜா சேதுபதியின் பேரன் என்ற உண்மை தெரிய வருகிறது. 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.