தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராமையா சுடரை எழிலுக்கு அறிமுகம் செய்ய கூப்பிட அவளும் பயந்து நடுங்கி வெளியே வர எழிலுக்கு போன் கால் வந்து விடுவதால் அவன் எழுந்து சென்று விடுகிறான்.


இதனைத் தொடர்ந்து எழிலிடமிருந்து தப்பித்த சுடர் குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டி வந்து விடுகிறாள். அடுத்து ஒரு கடையில் கோலிசோடா குடித்துக் கொண்டிருக்கும் போது திருடன் ஒருவன் ஒரு பெண்மணியின் பேக்கை திருடி கொண்டு ஓட சுடர் கையில் இருக்கும் பாட்டிலை வீச அது மீண்டும் தலையில் போய் விழுகிறது.


இதனால் பதறிப் போகும் சுடர் அதிர்ச்சி அடைகிறாள். குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் அவர்களை படிக்க சொல்ல அவர்கள் கடைபிடிக்க இல்லனா உங்க டாடி கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டி படிக்க வைக்கிறாள். இதனால் கடுப்பான குழந்தைகள் சுடரை படித்திருக்க பிளான் போட்டு பேய் வேஷம் போட்டு பயமுறுத்துகின்றனர்.


கழுத்தை நெரித்ததும் பயந்து போய் சுடர் வெளியே ஓடி வர எழிலும் சத்தம் கேட்டு வெளியே வர சுடர் பேய்க்கு பயந்து எழிலை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


 






மேலும் படிக்க


RV Udhayakumar: நிறைய காட்றாங்க .. பெண்களின் ஆடை குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சர்ச்சை பேச்சு!


Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்!