தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தேவி அம்மா கோரக்கை மரத்தில் தொங்க விட்டு கொன்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, சூர்யா அங்கு ஜாஸ்மின் இருப்பதை பார்த்து விடுகிறாள், உடனே ஜாஸ்மினை துரத்தி செல்ல வீட்டிற்கு ஓடி வரும் அவள் தாராவிடம் விஷயத்தை சொல்ல நீ மேலே போய் உடனே ட்ரெஸ்ஸை மாற்று, மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்கிறாள். சூர்யா வீட்டிற்கு வந்து ஜாஸ்மின் என சத்தம் போட தாரா என்னாச்சு என்று கேட்கிறாள்.


சூர்யா கோரக் கொல்லப்பட்ட விஷயம், அங்கு ஜாஸ்மினை பார்த்தது போன்ற விஷயங்களை சொல்ல தாரா ஜாஸ்மின் வீட்டில் தானே இருந்தால் என்று சமாளிக்க முயற்சிக்க ஹாசினி இல்ல அவ வெளியில் போயிட்டு வந்தா என்று உண்மையை உடைத்து விடுகிறாள். இருந்தாலும் தாரா ஒரு வழியாக சமாளிக்க ராசாத்தியை கொன்னது ஜாஸ்மின் தான். அதற்கு ஆதாரம் டாக்டர் தான். அவர் கோமாவில் இருந்து கண் விழிக்கட்டும் அப்புறம் இருக்கு என வார்னிங் கொடுக்க ஜாஸ்மின் அதிர்ச்சி அடைகிறாள்.


பிறகு வீட்டிற்கு வந்த சூரியா மாரியிடம் நடந்த விஷயங்களை சொல்ல மாரி நீங்க ஏன் டாக்டர் பத்தி சொன்னீங்க, இப்போ அவரையும் கொல்ல தான் பார்ப்பாங்க என்று சொல்ல சூர்யா அப்படி எதுவும் நடக்காது என்று சொல்கிறான். மேலும் அந்த கருப்பு உருவம் மனைவி யார்னு கண்டுபிடிக்கணும் என்று இவர்கள் பேச அதை கருப்பு உருவம் கேட்டு விடுகிறது.


உடனே தாராவுக்கு போன் செய்து நம்ம கல்யாண போட்டோ சூர்யா கிட்ட மாட்டிகிட்டு இருக்கு, உன் முகத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்ய போறாங்க, எப்படியாவது அதை தடுத்து நிறுத்து என்று சொல்ல தாரா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க


Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்


80 பயணிகளுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வலி! சென்னையில் இருந்து சென்ற ரயிலில் பரபரப்பு


TN Rain Alert: சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்.. எந்த தேதிகளில்? மழை அப்டேட் இதோ..