மாரி சீரியலில் சூர்யா லிஃப்டில் மாட்டிக்கொண்ட மாரியை மீட்கப் போராடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
மாரி சீரியல்:
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. முன்னதாக ஜாஸ்மின் செய்த சதியால் மாரி துணிக்கடையில் லிஃப்டில் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இன்றைய எபிசோடில் கோவிலுக்குள் சென்ற சூர்யா தனது மனைவி மாரியை தன் கண்ணில் காட்டி விடுமாறு வேண்டிக் கொள்கிறார். அப்போது மாரி நீங்க வரும் வரைக்கும் நான் இங்கேயே இருக்கிறேன் என சொன்ன விஷயம் நியாபகத்துக்கு வருகிறது. உடனே துணிக்கடையை நோக்கி சூர்யா விரைந்து செல்கிறார். ஆனால் கடை பூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளே மாரி லிஃப்டில் கதவை தட்டியபடி இருக்கிறார்.
அங்கிருக்கும் வாட்ச் மேனிடம் சூர்யா கடையை திறக்க சொல்ல, சாவி தன்னிடம் கிடையாது மேனேஜர் கிட்ட தான் இருக்கு என்று அவர் சொல்கிறார். இதனால் மேனேஜருக்கு சூர்யா போன் பண்ணும் நிலையில், அவர் போனை எடுக்காமல் இருக்கிறார். இதனால் சூர்யாவுக்கு டென்ஷன் ஆகிறது. இதனையடுத்து மேனேஜரின் முகவரியை வாங்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சூர்யா புறப்படுகிறார்.
மறுபுறம் வீட்டில் சூர்யாவுக்காக தாரா ஜாஸ்மின் அனைவரும் காத்திருக்கும் நிலையில் நல்ல நேரம் முடிந்து விடுகிறது. இதுக்கு மேல பூஜை செய்தால் நினைத்தது நடக்காது என்று நம்பூதிரி சொல்லிவிட்டு செல்ல, தாரா கோபப்படுகிறார். மேலும் மாரி இந்த வீட்டுக்கு பிணமாக தான் வருவா என கொந்தளிக்கிறார். இந்த பக்கம் சூர்யா மேனேஜர் வீட்டுக்கு வந்து கதவை தட்டியும் திறக்காதால் ஏறி குதித்து உள்ளே செல்கிறார்.
சூர்யா வாக்குவாதம்:
இதைக்கண்டு டென்ஷனாகும் மேனேஜர் சூர்யாவிடம் வாக்குவாதம் செய்கிறார். ஆனால் தன் மனைவியின் நிலையை சொல்லி கெஞ்சி கூத்தாடி கடை சாவியை வாங்கிக்கொண்டு மேனேஜருடன் சூர்யா கடைக்கு வந்து உள்ளே தேட ஆரம்பிக்கிறார். லிஃப்டில் இருந்து மாரியின் சத்தம் கேட்பதை அறிந்த சூர்யா மேனேஜருக்கு சொல்ல, அவர் லிப்டை சரி செய்யும் ஆட்களை வரவைத்து லிப்ட் திறக்கிறார்.
இதனையடுத்து மாரியை சூர்யா பத்திரமாக மீட்கிறார். அவரை அழைத்துக் கொண்டு நேராக மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்து கொள்கிறார். அதேசமயம் சமயத்தில் சூர்யா காப்பாற்றிய பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்க அவருடைய அம்மா வந்து சூர்யாவுக்கு நன்றி சொல்கிறார். மேலும் மாரியை பார்த்து நீங்கள் சந்தோஷமாக இருப்பீங்க என்று வாழ்த்தும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.