பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை தேடி அவரது ஊருக்கு செல்ல முடிவெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.


இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.


அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.


ராதிகாவை வம்பிழுக்கும் ராமமூர்த்தி


ராமமூர்த்தி காலையிலேயே ராதிகாவிடம் வம்பிழுக்க முடிவு செய்து, தனக்கு காலை, மதியம் சாப்பாடுக்கு இதுதான் வேண்டும் என சொல்கிறார். ஆனால் அத்தனையும் செய்து வைத்து விட்டு தான் எப்படி ஆபீஸ் போக முடியும் என ராதிகா கேட்க, அதெல்லாம் போகலாம் என நக்கலாக அவர் பதில் சொல்கிறார். இதனையடுத்து கிச்சனில் இருக்கும் ராதிகாவிடம் கோபி, அவரு ஆசைப்பட்டு கேக்குறாரு. செஞ்சி கொடுத்துரு. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என சொல்லி ராதிகாவை சமாதானப்படுத்துகிறார். கோபி அந்த வீட்டுல சாப்பிட்டு பழகிட்டாரு என சொல்கிறார். அப்போது ராமமூர்த்தி நம்ம வீட்டுல கிச்சன் பக்கமே போகாத கோபி இங்க என்ன பண்ணிட்டு இருக்கான் பாரு என இனியாவிடம் சொல்கிறார். 



ஆபீஸில் எழிலும், சதீஷூம் பேசிக்கொள்கிறார்கள், அமிர்தா வீட்டில் நடந்த எல்லாவற்றையும் சொல்ல சதீஷ் குழம்பி போகிறார். பின்னர் அமிர்தாவுக்கு எழிலை போன் பண்ணி பார்க்க சொல்கிறார். அவரும் ட்ரை பண்ண அங்கு வரும் வர்ஷினி அமிர்தா ஒரு ஆளே இல்லை. உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கப் போகுது என சவால் விடுகிறார். உடனே எழில் நீங்க அமிர்தாவை போய் பார்த்தீங்களா என கேட்க, வர்ஷினி மழுப்பி விட்டு செல்கிறார். ஆனால் சதீஷ் வர்ஷினி அமிர்தா வீட்டுக்குப் போய் என்னமோ சொல்லிருக்கு என அடித்து சொல்கிறார். இதனால் டென்ஷனாகும் எழில், அப்படி மட்டும் நடக்கட்டும். நான் சும்மா இருக்க மாட்டேன் என சதீஷை அழைத்துக் கொண்டு அமிர்தா ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார்.


மாட்டிக்கொள்ளும் ஈஸ்வரி, செழியன்


வீட்டில் ஈஸ்வரி, செழியன் ரகசியமாக பேசிக்கொள்வதால் சந்தேகப்பட்ட ஜெனி, செல்வி இருவரும் கோவிலுக்கு போய்ட்டு வந்தீங்களே..விபூதி, குங்குமம் எதுமே இல்லையே என கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள்.  இருவரும் சமாளித்து விட்டு அங்கிருந்து நகர, செழியனிடம் நான் போய் என்னென்னு கேக்குறேன் என ஜெனி செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.