மாரி சீரியலில் இன்றைய எபிசோடில் ஜாஸ்மின் செய்த சதியால் மாரி லிஃப்டிற்குள் மாட்டிக்கொள்ளும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  முன்னதாக  கோயிலில் மாரிக்கு சூர்யா உதவுவதைக் கண்டு தாரா, ஸ்ரீஜா, ஜாஸ்மின் மூவரும் கடுப்பாகின்றனர். பின்னர் ஹாசினி சொல்ல மாரியை சூர்யா துணிக்கடைக்கு அழைத்து செல்கிறார். உடனே ஸ்ரீஜா நம்பூதிரிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறார்.


அவர் உங்கள் வீட்டிற்கு நான் வந்து சூர்யாவை வைத்து பூஜை செய்கிறேன். அவர் கையில் இருந்து அந்த கயிற்றை கழட்ட வேண்டும். அப்போது மாரி அருகில் இருக்கக்கூடாது, எப்படியாவது சூர்யாவை மட்டும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல, நான் அழைத்து வருகிறேன் என்று சொல்லி ஜாஸ்மின் கிளம்பி செல்லும் காட்சிகள் இடம் பெற்றது. 


இன்றைய எபிசோடில் மாரியை சூர்யா துணி கடையில் விதவிதமான டிசைன்களில் புடவைகளை எடுத்துக்காட்ட, மாரி சூர்யாவை நினைத்து ஃபீல் பண்ணுகிறார். மறுபக்கம் வீட்டில் நம்பூதிரியை வைத்து தாரா, சூர்யாவின் கையில் இருக்கும் கயிறை கழற்றுவதற்கான பூஜைகளை ஏற்பாடு செய்கிறாள். அனைவரும் காத்திருக்க சூர்யா வரவில்லை. உடனே தாரா ஆஃபீசுக்கு போன் செய்து ஊழியர் ஒருவரிடம் சூர்யாவை உடனடியாக கையெழுத்து போட வேண்டும் என்று வரச்சொல்லுமாறு தெரிவிக்கிறார்.  அவரும் சூர்யாவுக்கு போன் பண்ணிகிறார்.






இதனையடுத்து போன் வந்ததும், சூர்யா மாரியிடம் நீ புடவை செலக்ட் பண்ணி விட்டு இங்கேயே இரு நான் ஆஃபீசுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே போகிறார். அந்நேரம் பார்க்க கடைக்குள் ஜாஸ்மின் உள்ளே வருகிறார். ஜாஸ்மின் உள்ளே வந்து மாரியை பார்த்து ஒரு ஊழியரிடம் பணத்தை கொடுத்து மாரி மீது ஜூசை கொட்ட சொல்கிறார். அந்த ஊழியரும் அப்படியே பண்ண புடவையை கிளீன் பண்ண மாரி கடையின் மேலே செல்கிறார்.


படிக்கட்டு வழியாக ஏறி மேலே போகும்போது, திடீரென சூர்யா சொல்லிக் கொடுத்தது ஞாபகத்துக்கு வர மாரி லிஃப்டை பயன்படுத்தி மேலே செல்கிறார். மறுபடியும் லிஃப்டுக்குள் ஏறும் போது, கீழே ஜாஸ்மின் லிஃப்ட்டை ஆஃப் பண்ணி வயரை அறுத்து விடுகிறார். இதனால் லிஃப்டுக்குள் மாரி மாட்டி விட,  கதவு தட்டியும் யாருக்கும் கேட்கவில்லை. ஜாஸ்மின் கடையில் உள்ளவர்களிடம் சமாளித்து பேசிவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறார்.


இதனால் கடைக்காரர்களும் லிப்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு இருக்க,  சூர்யா சிறிது நேரம் சென்ற பின் கடைக்கு வந்து  தேட மாரி இல்லாததை கண்டு அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.