Maari: நிறைவேறாமல் போன தாராவின் ஆசை.. விறுவிறுப்பாக செல்லும் மாரி சீரியலின் இன்றைய அப்டேட் இதோ..!

மாரி சீரியலில் சூர்யா கோயிலில் மாரிக்கு உதவி செய்ய அதைப் பார்த்து தாரா, ஸ்ரீஜா, ஜாஸ்மின் மூவரும் கடுப்பாகும் காட்சுகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

மாரி சீரியலில் சூர்யா கோயிலில் மாரிக்கு உதவி செய்ய அதைப் பார்த்து தாரா, ஸ்ரீஜா, ஜாஸ்மின் மூவரும் கடுப்பாகும் காட்சுகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  முன்னதாக கோயிலில் விளக்கேற்றி வலம் வரும் சூர்யா எதிரே விளக்குடன் வரும் மாரியை பார்த்து சந்தோஷமடைகிறார். ஆனால் தாரா, சூர்யா ஜாஸ்மினை பார்த்து விட்டதாக நினைக்கிறார். கடைசியில் மாரியை பார்த்ததாக சூர்யா சொல்ல, தாரா டென்ஷனாகும் காட்சிகள் இடம் பெற்றது. 

இன்றைய எபிசோடில் கோயிலில் மாரி மணி அடிக்க முயற்சி செய்கிறார். அவருக்கு  சூர்யா அவளுக்கு உதவி செய்ய இதை அனைத்தையும் தாரா, ஸ்ரீஜா, ஜாஸ்மின் மூவரும் பார்த்து கடுப்பாகின்றனர்.  அப்போது இரு வயதான தம்பதிகள் வர சூர்யா மாரி அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். 

அப்போது அவர்கள் தங்கள் கழுத்தில் இருந்த மாலையை மாரிக்கும் சூர்யாவுக்கும் அணிவிக்கிறார்கள். இதனால் தாரா உட்பட அனைவரும் இன்னும் கடுப்பாகி வெளியே வருகிறார்கள். மேலும் புடவை எதுவுமே இல்லை, அதனால் சூர்யா சார் நீங்க மாரியை துணி கடைக்கு அழைத்துச் சென்று புடவை வாங்கி கொடுங்கள் என்று ஹாசினி சொல்ல இருவரும் கடைக்கு செல்கின்றனர். 

உடனே ஸ்ரீஜா நம்பூதிரிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறார். அவர் உங்கள் வீட்டிற்கு நான் வந்து சூர்யாவை வைத்து பூஜை செய்கிறேன். அவர் கையில் இருந்து அந்த கயிற்றை கழட்ட வேண்டும். அப்போது மாரி அருகில் இருக்கக்கூடாது, எப்படியாவது சூர்யாவை மட்டும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல, நான் அழைத்து வருகிறேன் என்று சொல்லி ஜாஸ்மின் கிளம்பி செல்கிறார்.

அப்போது விக்ரம் ஜானகியை சந்திக்கிறார். அவர் தாரா சிறுவயதில் சூர்யாவுக்கு கொடுப்பதற்காக ஒரு மேஜிக் பாக்ஸை வீட்டில் வைத்தாள். அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த மேஜிக் பாக்ஸ் இருந்தால் நிச்சயம் தாரா தப்பானவர் தான் என்று கண்டுபிடித்து விடலாம் என்று சொல்ல விக்ரம் யோசிக்கிறார். இதனை சூர்யாவும் மாரியும் துணி கடைக்கு வரும்போது அங்கு லிஃப்டை பார்த்தவுடன் மாரி பயப்படுகிறார். அவருக்கு  சூர்யா லிப்ட் எப்படி உபயோகிக்கப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்து உள்ளே அழைத்து செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola