பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா வீட்டுக்கு சென்று ஈஸ்வரி எழில் விவகாரத்தைப் பற்றி பேசும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.


இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.


அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.


மாட்டிக்கொண்ட எழில் 


வீட்டில் எழில் சோகமாக இருப்பதையும், வர்ஷினி சொன்னதைப் பற்றியும் ஈஸ்வரி சிந்தித்து கொண்டிருக்கிறார். அப்போது யாருக்கோ போன் செய்து எழில் முகம் சோகமாக மாறுவதை செழியன், ஈஸ்வரி கவனிக்கிறார்கள். அவரிடம் கேட்டால் ஏதேதோ சொல்லி சமாளிவிட்டு செல்கிறார். இதனால் சந்தேகமடையும் ஈஸ்வரி எழில் போனை செக் பண்ணுமாறு செழியனிடம்  கூறுகிறார். இதில் அமிர்தாவுக்கு தான் எழில் போன் செய்ததாகவும், இவன் ரொம்ப லவ் பண்றான் போல எனவும் செழியன் கூற ஈஸ்வரி ஆத்திரமடைகிறார். இதுதொடர்பாக அமிர்தா வீட்டுக்கு சென்று பேச முடிவெடுக்கிறார். 


வருத்தத்தில் பாக்யா 


பாக்யா, எழில், செல்வி 3 பேரும் கேட்டரிங் காண்டிராக்ட் கிடைக்காததைப் பற்றியும் இனி என்ன செய்யலாம் எனவும் டிஸ்கஷன் செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது பாக்யாவுடன் வேலை செய்யும் பெண்கள் ஐடி கம்பெனி கேட்டரிங் காண்டிராக் கிடைத்து விட்டதாக நினைத்து அவரிடம் எப்போது வேலைக்கு வர வேண்டும் என கேட்கிறார்கள். அவரிடம் அது கையை விட்டு போன கதையை சொல்ல அவர்கள் ஆறுதல் சொல்கிறார்கள். பாக்யா பதிலுக்கு நன்றி தெரிவிக்கிறார். 


ஈஸ்வரி எடுத்த முடிவு 


ஜெனியிடன் செழியன் கிளம்பி விட்டானா என கேட்டு விட்டு, பாக்யாவிடம் திடீரென அமிர்தா பற்றியும், அவரது வீடு எங்கே இருக்கிறது என்றும் ஈஸ்வரி கேட்கிறார். பாக்யாவும் என்ன எதுவென்று கேட்காமல் பதில் சொல்கிறார். அவர் திரும்பி செழியனுடன் எங்கே போறீங்க என கேட்க, கோயிலுக்கு என பொய் சொல்கிறார். ஆனால் ஜெனிக்கு இருவர் மீது சந்தேகம் வருகிறது. பாக்யாவிடமும் அதுபற்றி கூறுகிறார். 


அமிர்தா வீட்டுக்கு செழியன், ஈஸ்வரி இருவரும் வருகிறார்கள். அவரின் பெற்றோரிடம் எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து கொடுக்க எதும் எண்ணம் இருக்கா என ஈஸ்வரி கேட்கிறார். எழில் தான் தங்களிடம் கேட்டதாக கூறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் நடைபெறுகிறது.